லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் படத்துக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடித்துள்ளன.



இந்நிலையில் விக்ரம் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பஞ்சத ந்திரம் படத்தில் நடித்த யூகிசேது, ரமேஷ் அரவிந்த், ஜெயராம், ஸ்ரீமன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.


 



இந்த ப்ரோமோவானது, பஞ்ச தந்திரம் படத்தில் கமலும் அவரது நண்பர்களும் ஃபோனில் பேசுவது போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.


பஞ்ச தந்திரம் படத்தில் ஐயர் கதாபாத்திரத்தில் நடித்த யூகிசேது, நாளிதழ் ஒன்றில்  ‘Ram Most Wanted’ என்ற வாசகத்தை படித்துவிட்டு மற்றவர்களுக்கு பதறியடித்து ஃபோன் செய்து பேசுவது போன்று காட்சிகள் அமைந்துள்ளன.


 



கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், யூகிசேது, ஜெயராம், ஸ்ரீமன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் பஞ்ச தந்திரம். 2002ஆம் ஆண்டு வெளியான இப்படம் கமலின் திரைப்பயணத்தில் முக்கியமானது.


மேலும் படிக்க | தயாநிதி - அஜித் சந்திப்பு ஏன்?... உருவாகிறதா மங்காத்தா 2


படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும் இப்படம் கமலின் ரசிகர்களுக்கு எவர் க்ரீன் ஆகும்.



தற்போது அதே ஸ்டைலில் படத்தின் ப்ரோமோவை உருவாக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் வெறித்தனமான ரசிகர் என்பதை நிரூபித்துவிட்டார் எனவும், படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனவும் கூறி ப்ரோமோவுக்கு பலத்த வரவேற்பை அளித்துள்ளனர். மேலும், க்ரியேட்டிவாக யோசிக்கும் லோகேஷ் கனகராஜுக்கு தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துவருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR