தமிழில் பாரீஸ் பாரீஸ் பெயரில் ரீமேக் ஆகிறது குயின்
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் ‘குயின்’ என்ற படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்று அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.
இதையடுத்து, இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியிருந்தார்.
இந்நிலையில் தமிழில் இப்படத்தை நடிகரும் மற்றும் இயக்கியவருமான ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. கங்கனா ரோலில் காஜல் அகர்வால் நடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இப்படத்திற்கு "பாரீஸ் பாரீஸ்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.