காலமானார் : பிரபல நடிகை குமாரி ராதா
நடிகை குமாரி ராதா என்கிற பி.வி.ராதா அவர்கள் இன்று மரணம் அடைந்தார். ஆகஸ்டு மாதம் 1948-ம் ஆண்டு பிறந்தார். இவர் 1964-ம் ஆண்டு நவகோட்டி நாராயணா என்ற படத்தில் ராஜ்குமார் அவர்களுக்கு ஜோடியாக கன்னட படத்தில் அறிமுகமானவர் இவர்.
பி.வி.ராதா தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு உள்பட 3௦௦-க்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபாலமான இவர் 69வது வயதில் காலாமாகியுள்ளர்.
பெங்களூரில் வசித்து வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கேன்சரால் அவதிப்பட்டுவந்தார், பின்னர் கேன்சராலில் மீண்டு வந்த இவர். இன்று காலை மரணம் அடைந்துள்ளார்.
இவரின் கணவர் 2015-ம் ஆண்டு மறைந்தார். பிரபல இயக்குனர் கே.எஸ்.எல்.சாமி ஆவார்.
தமிழ் சினிமாவில் 1965-ம் ஆண்டு வெளிவந்த தாழம்பூ படத்தில் நல்ல பெயரை பெற்றுத்தந்தது இதையெடுத்து சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினிகணேசன், நாகேஸ்வர ராவ், என்,டி.ராமராவ், எம்,ஜி,ஆர் என்று பல பிரபலங்களுடன் நடித்துயுள்ளார்.
பி.வி.ராதா மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து உள்ளன.