பத்து தல - பிரேக் எடுக்கும் சிம்பு...
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்புவுக்கு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படம் கம்பேக் கொடுத்தது. அந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்து 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. அடுத்ததாக அவர் கௌதம் இயக்கத்தில் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். கடந்த மாதம் வெளியான இந்தப் படமும் வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை சிம்பு கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இதே ஃபார்மில் அவர் செல்லவேண்டுமெனவும் விரும்புகின்றனர். அதன்படி, சிம்பு அடுத்ததாக, சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்துவருகிறார்.
இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 2017ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த ’முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் வில்லனாக நடிக்கிறார். நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதையாக இது உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்துவருகிறது. பரபரப்பாக நடந்த இந்த ஷெட்யூலில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இச்சூழலில் இந்த வார இறுதியில் இந்த ஷெட்யூலானது முடிவு பெறவுள்ளதால் படக்குழுவுக்கு தீபாவளி பிரேக் கொடுக்கப்படுகிறது. தீபாவளி முடிந்ததும் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!