Pimbilikki Pilappi: பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. ஏகே புரொடக்ஷன்ஸ்  தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' படத்தின் டீஸர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்ட 'பிம்பிளிக்கி பிலாப்பி' டீசரை பார்த்த உலகெங்கிலும் இருந்து வந்திருந்த இயக்குநர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் வெகுவாக பாராட்டினர்.  பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள அழகான பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் தீனா மற்றும் மரிய செல்வம் ஆவர்.  ஹாரர்-டார்க் காமெடி படமாக உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 2,000 கோடி வரை பரிசாக வெல்லக் கூடிய லாட்டரி முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி சீட்டை தேடி செல்லும் கும்பல் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறது. அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதே படத்தின் மையக்கதை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | John Wick 4: ஓடிடியில் வெளியாகிறது ஜான் விக் 4..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?


இயக்குநராக அறிமுகமாகும் ஆண்டனி 'எல்ஸா' என்கிற பிரெஞ்சு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படம் சில வருடங்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றுள்ளது. 'பிம்பிளிக்கி பிலாப்பி' முதன்மை கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். கதாநாயகர்களாக வெங்காராஜ், ராஜேந்திரன், கதாநாயகிகளாக நர்மதா, ஆன் சாமுவேல் ஆகியோர் நடித்துள்ளனர். ஆண்டனி படத்தின் வில்லனாக நடித்துள்ளார். தியரி, கிருஷ்ணகாந்த், ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த குவாகு என்பவர் தமிழில் பேசி நடித்துள்ளார். 



படத்தொகுப்பு பணிகளை ராம் மற்றும் சதிஷ் ஆகியோர் மேற்கொள்கின்றனர். இயக்குநர் ஆண்டனி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கிறார். கலரிஸ்டாக வீரராகவன் பணியாற்றுகிறார். இப்படத்திற்கு ஜோகன் சிவனேஷ் இசையமைக்க, சாண்டி மாஸ்டர் நடன இயக்கத்தை மேற்கொள்கிறார்.  இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  ஏகே புரொடக்ஷன்ஸ்  தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' படத்தின் டீஸர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் விரைவில் வெளியாக இப்படம் தயாராகி வருகிறது. 


மேலும் இவ்விழாவில் வெங்காயம் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தனி ஒருவனாக ஒரு திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்து எடுத்து முடித்த ONE திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது.  திரைப்பட விழாவிற்கு வந்திருந்த பல்வேறு நாட்டினரின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றது.  குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரேசில், ஜப்பான் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் திரைத்துறையினரின் மத்தியில் பெரும் ஆச்சரியத்துடன் கூடிய வரவேற்பை பெற்று சிறப்பிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரரிடம் இந்த படம் எப்படி எடுக்கப்பட்டது, ஒற்றை மனிதராக இப்படத்தை எடுத்து முடிக்க எதிர்கொண்ட சவால்கள் என்ன ?, எப்படியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.  மேலும் இந்திய அரசின் சார்பாக கேன் திரைப்பட விழாவிற்கு வந்திருந்தவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவிப்போம் என்றும் உறுதியளித்தனர்.  விரைவில் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.


மேலும் படிக்க | Nitesh Pandey: பாலிவுட்டை துரத்தும் சோகம்..ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்தி சீரியல் நடிகர்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ