தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள 'பீட்சா' வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான 'பீட்சா 4' -ஐ K A ஆண்ட்ரூஸ் இயக்குகிறார்.  எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும் 'கடாரம் கொண்டான்' மற்றும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா நாயகி ஆவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரஜினி, கமல் to விஜய், அஜித்-பொது இடத்தில் கோபப்பட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள்!


'எல் கே ஜி', 'மூக்குத்தி அம்மன்', 'கொரில்லா', 'களத்தில் சந்திப்போம்', 'அயலி', 'சூது கவ்வும் 2', 'யங் மங் சங்', 'ஃபிளாஷ்பேக்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' உள்ளிட்ட படங்களில் இணை மற்றும் துணை இயக்குநராக பணியாற்றியுள்ள K A ஆண்ட்ரூஸ், 'பீட்சா 4' திரைப்படத்தை இயக்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "எத்தனையோ திறமையான இயக்குநர்களையும் இதர கலைஞர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியுள்ள தயாரிப்பாளர் சி வி குமார் அவர்களின் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் தயாரிப்பில், 'பீட்சா' வெற்றி வரிசையின் நான்காம் பாகத்தை இயக்குவது மிகவும் பெருமையாக உள்ளது. 



முதல் பாகத்திற்கும் நான்காம் பாகத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கும். அது என்ன என்பது சஸ்பென்ஸ்," என்று இயக்குநர் ஆண்ட்ரூஸ் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "'ராட்சசன்', 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய எஸ் ஜே அர்ஜுன் 'பீட்சா 4' திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். வலுவான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது. திரில் மற்றும் திகில் கலந்து ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் 'பீட்சா 4' அமையும்," என்று தெரிவித்தார். 


'பீட்சா 4' குழுவினரின் விவரம் வருமாறு: ஒளிப்பதிவாளர்: ஸ்ரீராம், சண்டை பயிற்சி: ராம்குமார், மேலாளர்: விஜயன் சி வி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்: வெங்கி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதா தங்கராஜ், இசை: ஹரி, கலை இயக்குநர்: சிவா, காஸ்டியூமர்: செல்வம், ஒப்பபனை: வினோத், படத்தொகுப்பு: ராதாகிருஷ்ணன். 


மேலும் படிக்க | விஜய்யின் தாயுடன் பிக்பாஸ் வனிதா மற்றும் ஜோவிகா! வைரல் புகைப்படங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ