தன்னை பத்திரிகையாளர் என கூறிக்கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகைகள் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரைப் பொறுத்தவரை அவர் கூறுவதுதான் உண்மை எனவும், தன்னை எதிர்த்து கேட்க எவருமே இல்லை எனவும் நினைத்துக்கொள்பவர். அதுமட்டுமின்றி தான் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருப்பவன். அதனால் தமிழ் சினிமா குறித்தும், அதில் பணியாற்றுபவர்கள் குறித்தும் தனக்கு அனைத்தும் தெரியும் என வெளியில் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்.


\


ஆரம்பத்தில் அளவோடு பேசிய ரங்கநாதன் சமீபகாலமாக மிகவும் கொச்சையாக, கீழ்த்தரமாக பேசிவருகிறார். கோலிவுட்டில் யாருக்கேனும் விவாகரத்து நடந்தால், அந்த தம்பதிக்குள் என்ன நடந்தது என்றே தெரியாமல் அவர்கள் அருகில் இருந்ததுபோல் பேசுவார்.


அவரது பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். மேலும் சினிமாவின் மூத்த உறுப்பினர்களும், பத்திரிகையாளர்களும் அவரை கண்டித்து வைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.



இந்தச் சூழலில் பாடகி சுசித்ரா குறித்தும் அவர் தரக்குறைவாக பேசினார். இந்நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுசித்ரா புகார் ஒன்று அளித்தார். 


மேலும் படிக்க | 40 வருஷத்துக்கு முன்னாடியே வந்த கமல்ஹாசனின் Multiverse மூவி!- என்ன படம்னு தெரியுமா?!


அந்தப் புகாரில், தன் மீது நடிகர் பயில்வான் ரங்கநாதன் எந்தவித ஆதாரமுமின்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். என் மீது வேண்டுமென்றே அவதூறாக கருத்துகளை சுமத்தி என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். 


இதனால் எனக்கு பாடல் பாடும் வாய்ப்பு குறைந்து வருகிறது. எனவே, என்னை பற்றி உண்மைக்கு புறம்பாக அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.


முன்னதாக தன்னை பற்றி அவதூறாக பேசிய பயில்வான் ரங்கநாதனை தொலைபேசியில் அழைத்து சுசித்ரா பேசும் ஆடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கல்யாணத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவனிற்கு நயன்தாரா அளித்த பரிசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR