காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தனுஷ் தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்து பாலிவுட்டுக்கு சென்றார். அங்கும் வெற்றிக்கொடி நாட்டிய அவர் அடுத்ததாக ஹாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். அவர் சமீபத்தில், 'கேப்டன் அமெரிக்கா', 'அவெஞ்சர்ஸ்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஜோ ருஸ்ஸோ, அந்தோனி ருஸ்ஸோ சகோதரர்கள் உருவாக்கிய படமான 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். கடந்த மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படத்தில் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். அவரது நடிப்பு படம் பார்த்த ரசிகர்களால் மட்டுமல்லாமல், ருஸ்ஸோ சகோதாரர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


'தி கிரே மேன்' படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாக உள்ளதாகவும், இதில் நடிகர் தனுஷுக்கு பின்கதையுடன் கூடிய முக்கிய கதாபாத்திரத்தை உருவாக்க இருப்பதாகவும் இயக்குநர்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.


 



இந்நிலையில், க்ரே மேன் படத்தில் நடித்த நடிகர் தனுஷை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று ‘தி க்ரேமேன்’ படம் பார்த்து மகிழ்ந்தேன்.ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் பற்றி பெருமையாக உணர்ந்தேன். நடிகர் தனுஷின் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு மேலும் பல விருதுகள் எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | அதிதி ஷங்கரின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்க் எவ்வளவு தெரியுமா?


மேலும் படிக்க | கபாலி படத்தால் மன உளைச்சல்தான் - உண்மையை உடைத்த பா. இரஞ்சித்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ