நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பொலக்கட்டும் பறை பறை பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாஸ்டர், விஜய் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படம் இம்மாதம் (ஏப்ரல் 2020-ல்) திரைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, எனினும் கொரோனா அச்சத்தால் தற்போது நாடு முழுவதும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இத்திரைப்படம் வெளியாவது தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இருந்தபோதிலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத படக்குழுவினர், தற்போது இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பொலக்கட்டும் பறை பறை பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாலவிகா மோகனன் நாயகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் “ரஜினிகாந்த்” நடிப்பில் உருவான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை, தனது இரண்டாவது தமிழ் படத்தில் கதாநாயகியாக விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் பேராசிரியராக இருக்கும் கல்லூரியில் மாலவிகா மாணவியாக நடிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. 


இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், “கௌரி ஜி கிஷன்,” ஆண்ட்ரியா எரேமியா, ரம்யா சுப்பிரமணியன், “ஸ்ரீமான்,” “சஞ்சீவ்,” “ஸ்ரீநாத்” மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் இப்படத்தை வழங்குகின்றனர்.


முன்னதாக இத்திரைப்படத்தில் இசை வெளியாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் பாடல்களை லிரிக்கல் வீடியோ வாயிலாக ரசிகர்களிடையே சேர்த்துள்ளனர் படக்குழுவினர்.