Police Complaint Filed Against Vj Siddhu : சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரின் இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார் அதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி டிடிஎஃப் வாச வாசன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் வி.ஜே. சித்து என்பவர் அவர் நடத்திவரும் youtube சேனலில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார் அதில் அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி காரில் செல்போன் பேசியபடி காரை இயக்கியதால் அவர் மீதும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து புகார் அளித்தபின் ஷெரின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது கூறுகையில்,


போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து
தற்பொழுது அதேபோல் வி.ஜே.சித்து என்பவர்  அவர் நடத்தி வரும் யூடிப் சேனலில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அஜாக்கிரதையாக செல்போனில் பேசிய படியே காரை இயக்கியிருக்கிறார் இதைப் பார்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும்.


மேலும் படிக்க | சிக்கலில் TTF Vasan: இதுதான் உங்க சட்டம்? எனக்கு நீதி வேண்டும் -டிடிஎஃப் வாசன் ஆவேசம்


இது மட்டுமல்லால் அவருடைய வீடியோவில் ஆபாசமான வார்த்தைகளையும் இரட்டைபூர்வ வசனங்களையும் பேசிவருகிறார் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தவறாக பேசும் பழக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.


எனவே செல்போனில் பேசியபடி வாகனத்தை ஒட்டிக்கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் சட்டவிதிகளை மீறிய விஜே சித்து மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்க புகார் கொடுத்திருப்பதாக வழக்கறிஞர் ஷெரின் தெரிவித்தார்.


மேலும் நாங்கள் யாரைச் சார்ந்தும் இந்த புகாரை கொடுக்கவில்லை பொதுநலன் கருதத்தில் கொண்டு இந்த புகாரை அளித்துள்ளோம் வி.ஜே.சித்து உட்பட யார் விதிமீறல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர். 


மேலும் படிக்க | துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ