2023-ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிசில் கோலிவுட் படங்கள் பல வசூல் வேட்டை நடத்தி வருகிறது, நடப்பாண்டில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களாக திகழும் தளபதி விஜய்யின் 'வாரிசு' படம், அஜித்குமாரின் 'துணிவு' படம், சிலம்பரசனின் 'பத்து தல' படம் மற்றும் வெற்றிமாறனின் 'விடுதலை' என அடுக்கடுக்காக படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை அள்ளியது.  2023ம் ஆண்டின் முதல் பாதியிலேயே இத்தனை படங்கள் வெளியாகி நல்ல வசூலை அள்ளியிருக்கும் நிலையில், அனைவரது எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான 'பொன்னியின் செல்வன்-2' படமும் பாக்ஸ் ஆபிசில் தனது வெற்றிக்கொடியை நிலைநாட்ட தவறவில்லை.  அமரர் கல்கியின் கைவண்ணத்தில் தஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாற்றை கூறும் விதமாக கற்பனை கலந்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் எனும் புதினத்தை, இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமாவில் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.  கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்து படைக்கும் விதத்தில் இப்படம் அமைந்து இருந்தது.  நாவலை படித்தவர்களுக்கு படம் சற்று அதிருப்தியை கொடுத்தாலும், நாவலை படிக்காமல் இதனை ஒரு திரைப்படமாக நினைத்து பார்த்தவர்களுக்கு இப்படம் திருப்தியையும் கொடுத்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Keerthy Suresh: மாடர்ன் ரதி டூ மங்கள மங்கை..கீர்த்தி சுரேஷின் அசத்தல் க்ளிக்ஸ் இதோ!


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 28ம் தேதியன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது.  அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, வந்தியத்தேவனாக கார்த்தி நடித்திருந்தனர்.  மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் அஷ்வின், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துளிபலா, ரஹ்மான், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், நாசர், ஜெயராம், சாரா அர்ஜுன், பிரபு, விக்ரம் பிரபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  'பொன்னியின் செல்வன்-2' படம் எவ்வளவு வசூலை அள்ளியது என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கும் சமயத்தில், தற்போது படத்தின் வசூல் குறித்த தகவலை படத்தின் தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.



'பொன்னியின் செல்வன்-2' படம் வெளியான பத்து நாட்களில் ரூ.300 கோடி வசூலை பெற்று எலைட் க்ளப்பில் இணைந்தது.  தற்போது படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதிலும் படம் ரூ.400 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.  கோலிவுட் வட்டாரத்தில் புதிய படங்கள் ஒருபக்கம் வெளியாகிக்கொண்டு இருந்தாலும் காவிய வரலாற்று புனைகதை படமான பொன்னியின் செல்வன்-2 இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்த பிரம்மாண்ட படம் 2023-ம் ஆண்டில் வெளியான மற்ற பெரிய ஹீரோக்கள் படத்தின் வசூலை மிஞ்சி அதிகளவில் வசூல் செய்த தமிழ் படமாக மாறியுள்ளது.  'பொன்னியின் செல்வன்-2' படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தின் வசூல் குறித்த தகவலை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளது.  "சோழக் கொடி உயரப் பறக்கிறது! இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் #PS2!" என்று தயாரிப்பு நிறுவனம் பெருமையாக ட்வீட் செய்துள்ளது.


மேலும் படிக்க | Bigg Boss Julie: “ஜூலிக்கு கல்யாணமா?” மணக்கோலத்தில் நின்ற ஜோடியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ