ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு விவரம்: உலகழகி ஐஸ்வர்யா ராயின் 50வது பிறந்தநாள் இன்று. உலகழகிக்கு உலகம் முழுவதும் எத்தனை கோடிகளில் சொத்து இருக்கிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகழகி ஐஸ்வர்யா ராய்:
கர்நாடக மாநிலம் மங்களூரில் 1973ஆம் ஆண்டு பிறந்தார் ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai Bachchan). கர்நாடகாவில் இருந்து குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார். அவரது பன்னிரெண்டாம் வகுப்பில் 90 சதவிகித மதிப்பெண் பெற்றார். அதன்பிறகு மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு, கட்டிடகலையில் ஆர்வம் வந்து அதற்கான கல்லூரியை தேர்ந்தெடுத்தார். மாடலிங் துறைக்கு வந்த பிறகு அந்த கல்லூரி படிப்பையும் நிறுத்திவிட்டார் ஐஸ்வர்யா ராய்.


1994 ஆம் ஆண்டு தனது 21 வயதில் மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றார். அதன் பின் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்த இவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து இன்று வரை டாப் நடிகையாகவே இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2 படங்களில் நடித்திருக்கிறார். 


மேலும் படிக்க | லியோவில் விஜய்யுடன் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? ‘இந்த’ நடிகரின் மகள்தான்!


கடந்த 2007 ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இன்று நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


உலகழகி ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு:
இந்நிலையில் தற்போது அதே அழகு பொங்க ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே பார்ப்போம். அதன்படி மூன்று தசாப்தங்களாக நடிகையாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 776 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் பணக்கார நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் ஒரு படத்தில் நடிக்க சுமார் 10-12 கோடி ரூபாயும், பிராண்ட் ஒப்புதலுக்காக சுமார் 6-7 கோடி ரூபாயும் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.


ஐஸ்வர்யா தனது அழகான (aishwarya rai bachchan net worth) குடும்பத்துடன் மும்பையின் ஜூஹூவில் உள்ள ரூ.112 கோடி மதிப்புடைய பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குடும்ப பங்களாவைத் தவிர, இருவரும், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா, துபாயில் உள்ள சரணாலயம் நீர்வீழ்ச்சி, ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸில் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள வில்லாவை வைத்துள்ளனர். மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது.


அதுமட்டுமின்றி A Rolls Royce Ghost, Audi A8L, Mercedes-Benz S500, Mercedes Benz S350d Coupe, Lexus LX 570 மற்றும் பல ஆடம்பர கார்களை வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா.


மேலும் படிக்க | Leo Day 6 Box Office: 6 நாளில் 250 கோடி வசூலா? மிரட்டும் விஜய்யின் லியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ