சோழர்கள் சிவ பக்தர்களா? திருமால் பக்தர்களா?! சர்ச்சையில் சிக்கிய பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஏகப்பட்ட குறைகள் இருப்பதாக பொன்னியின் செல்வன் விசிறிகள் டிவிட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் தமிழின் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாகும். தஞ்சையை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னன் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை புதினமாக சொன்ன நாவல் பொன்னியின் செல்வன்.
இந்த நாவலை பலர் பலமுறை படமாக்க முயற்சித்து தோல்வியை மட்டுமே கண்டனர். இந்த நிலையில் மணிரத்னம் எடுத்த துணிகர முயற்சியின் பயனாக பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | இழப்பதற்கு இனி எதுவும் இல்லை - காளி போஸ்டர் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை அதிரடி
பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜசோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இவரது தோற்றத்தைதான் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதில் விக்ரம் நாமம் போட்டு இருப்பது போன்று அமைந்துள்ளது. இதனை விமர்சித்து வரும் இணையவாசிகள், “சோழர்கள் சுத்த சைவர்கள். அவர்கள் எப்படி நாமம் அணிவார்கள்” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மற்றொருபுறம் அது நாமம் இல்லை. வெற்றித் திலகம் என்றும் டிவிட்டர் வாசிகள் எதிர்குரல் எழுப்பி வருகிறார்கள். இதேபோல ஆதித்த கரிகாலனின் பெயரை ஆதித்ய கரிகாலன் என்று லைகா நிறுவனம் எழுதியுள்ளது. ஆதித்யா என்றால் வடமொழி சொல். தமிழை இப்படி கொச்சைப் படுத்துவதா எனவும் இணையத்தில் கேள்வி எழுப்புகிறார்கள் கல்கி ரசிகர்கள்.
மேலும் படிக்க | சோழா To சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆதித்த கரிகாலன் - வைரலாகும் விக்ரம் புகைப்படம்
மேலும் சோழர்கள் சிவப்புக் கொடியைதான் பயன்படுத்தினார்கள். ஆனால் நீங்கள் போஸ்டரில் காவிக் கொடியை பயன்படுத்தியுள்ளீர்கள் என்றும் ஒருவர் விமர்சித்துள்ளார். ஒவ்வொரு போஸ்டருமே பல விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் படத்தை ரசிகர்கள் என்ன செய்ய போகிறார்கள் என நினைத்தாலே பதறுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR