பொன்னியின் செல்வன் 2 எப்போது?... மணிரத்னம் பதில்
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகுமென்று இயக்குநர் மணிரத்னம் விளக்கமளித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.
இதற்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்துவருகிறது. இதற்கிடையே பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பதால் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் மணிரத்னம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.ஆனால் இன்னும் அவ்வளவு வேலைகள் இருக்கின்றன. வேலைகள் முடிவதற்கு 9 மாதங்கள் ஆகலாம். படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும்” என்றார்.
மேலும் படிக்க | 'ஐஸ்வர்யா ராய் ஒரு தெய்வப்பிறவி' - வாயை பிளக்கும் இணையவாசிகள்; இந்த போட்டோவுக்கா?
மேலும் படிக்க | சில்க் ஸ்மிதா: கோலிவுட்டின் கனவு ராணிக்கு 26ஆம் ஆண்டு நினைவஞ்சலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ