பொன்னியின் செல்வன் 2 - வெளியானது புதிய அப்டேட்
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகி சமீபத்தில் வெளியானது. லைகா தயாரித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தின் முதல் பாகத்தில், வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும் படமானது 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி படைத்திருந்த கதாபாத்திரங்களை படத்தில் நடித்தவர்களும் அப்படியே பிரதிபலித்ததாக நாவல் படித்தவர்கள் பாராட்டினர். படத்தில் நடித்த அனைவரிடமும் மணிரத்னம் சிறப்பாக வேலை வாங்கியிருந்ததாக திரை ஆர்வலர்களும் பாராட்டினர்.
அதேசமயம் படத்திற்கு சிறிய அளவில் நெகட்டிவ் விமர்சனமும் வரத்தான் செய்தது. இருப்பினும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
முதல் பாகத்தில் இருந்த சில தவறுகள் நிச்சயம் இரண்டாம் பாகத்தில் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில்ல் பொன்னியின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் இன்று வெளியாகுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று வெளியான அப்டேட்டில், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தளபதி விஜய்யும் செருப்பும் ஒன்னா?... சர்ச்சையை பற்ற வைத்த யூட்யூபர் TTF வாசன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ