பவன்கல்யாணின் அரசியல் வாழ்க்கை, அதன் தோல்வி ஆகியவை தான் படத்தில் முக்கியமாக இடம் பெறும் எனத் தெரிகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா, தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான பவன் கல்யாணைக் கிண்டலடிக்கும் விதத்தில் எடுத்துள்ள படம் 'பவர் ஸ்டார்'. இப்படத்தின் டிரைலரை அவருடைய சொந்த இணையதளத்தில் இன்று வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். அதுமட்டும் இன்றி, அந்த டிரைலரைப் பார்க்க ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய திட்டத்தையும் வெளியிட்டிருந்தார்.  


ஆனால், அந்த டிரைலர் இணையதளங்களில் லீக் ஆனதால், சற்று முன் டிரைலரை youtube இலவசமாகவே வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... “Powerstar" டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக வேண்டியது. ஆனால், இணையதளத்தில் லீக் ஆகி வைரலாகிவிட்டது. எங்களது அலுவலகத்தில் இருக்கும் ஒருவர் தான் அதற்குக் காரணம் என நினைக்கிறேன். அதற்கான பொறுப்பை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். டிரைலரைப் பார்க்க பணம் செலுத்திய அனைவருக்கும் அப்பணம் உடனடியாக திருப்பித் தரப்படும்,” என்றும் கூறியுள்ளார்.


இன்று வெளியாகி உள்ள டிரைலர் 4 நிமிடங்கள் உள்ளது. பவன்கல்யாணின் அரசியல் வாழ்க்கை, அதன் தோல்வி ஆகியவை தான் படத்தில் முக்கியமாக இடம் பெறும் எனத் தெரிகிறது. டிரைலரில் அப்படியான காட்சிகள்தான் அதிகம் உள்ளன.



ஜுலை 25 ஆம் தேதி இப்படத்தை அவருடைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப் போகிறாராம். அதற்கு முன்னதாக முன்பதிவு செய்தால் படத்தைப் பார்க்க 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமாம். ஜுலை 25 ஆம் தேதி காலை 11 மணிக்குப் பிறகு முன்பதிவு செய்தால் 250 ரூபாய் கட்டணமாம். 'பவர் ஸ்டார்' டிரைலரைப் பார்க்கவே யாரும் 25 ரூபாய் பணம் கட்டி முன்பதிவு செய்யத் தயாராக இல்லை. இதில் படத்திற்கு 150 ரூபாய் கட்டணமா?.. திரைப்படமும் டிரைலரைப் போலவே வெளியாகும், அதை பாத்து கொள்கிறோம் என நெட்டிசன்கள் கிண்டலாக தெரிவித்து வருகின்றனர்.