ரசிகர்களால் ‘ரிபெல் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம், ஆதி புருஷ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடித்திருந்தார். இப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதிபுருஷ்:


இராமாயண கதையை தழுவி எடுக்கப்பட்ட படம், ஆதிபுருஷ். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ராமன் கதாப்பாத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இவருக்கு ஜோடியாக சீதை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சயிஃப் அலிகான், ஆதிபுருஷ் படத்தில் இராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் வெளியானது. 


ஓடிடியில் ரிலீஸ்:


ஆதிபுருஷ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, படம் இன்று வெளியாகியுள்ளது. ஓடிடி தளங்கிளில் பிரபலமான நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று முதல் ஆதிபுருஷ் திரைப்படத்தை பார்க்கலாம். ஆதிபுருஷ் படத்தின் டிஜிட்டல் உரிமம் சுமார் 250 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | Rajinikanth in Rishikesh: ரஜினிகாந்தின் ரிஷிகேஷ் பயண புகைப்படங்கள்!


கொடூரமான வி.எஃப்.எக்ஸ்:


ஆதிபுருஷ் படத்தின் பணிகள், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. படத்தின் முதல் டீசர் வெளியான போது, அதில் இடம் பெற்றிருந்த கிராஃபிக்ஸ் காட்சிகள் “கொடூரமான வி.எஃப்.எக்ஸ்” என ரசிகர்களால் வருத்தெடுக்கப்பட்டன. இதனால், இவை அனைத்தையும் மறுஉருவாக்கம் செய்த படக்குழு மீண்டும் இதையடுத்து புதிய வடிவத்தில் டீசர் மற்றும் ட்ரைலரை வெளியிட்டது. இருப்பினும் இவை பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. மேலும், எக்ஸ்ட்ரா கிராஃபிக்ஸ் பணிகளுக்காக படத்தின் பட்ஜெட் இன்னும் சில கோடிகளை எட்டியது.


நெகடிவ் விமர்சனங்கள்..


திரைத்துறையில் பல வருடங்களாக இருந்தாலும் நடிகர் பிரபாஸிற்கு ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் சேர்ந்துவிட்டனர். ஆதிபுருஷ் படத்தை படக்குழு பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அனைவருக்கும் தெரிந்த இராமாயணக்கதை என்றாலும் பிரபாஸ் மீது பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அனைவரது எதிர்பார்ப்புகளையும் சுக்கு நூறாக நொருக்கியது திரைப்படம். படத்தில் நிறைய இடங்களில் இராமாயணக்கதையின் வடிவங்கள் தப்பாக காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும் சிலர் கருத்துகளை தெரிவித்தனர். 


முத்த சர்ச்சை:


ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அப்படத்தின் நாயகியும் இயக்குநர் ஓம் பிரபாஷ் ராவத்தும் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தனர். அப்போது கிருத்தியை வழியனுப்பும் போது ஓம் ராவத் அவருக்கு கண்ணத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பட ரிலீஸ் சமயத்தில் வைரலாக பரவியது. இதுவும் படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றதற்கு ஒரு காரணமாக அமைந்தது. 


மேலும் படிக்க | கோடி கோடியாய் வசூலை குவிக்கும் ஜெயிலர்..! முதல் நாளே இவ்வளவு கலெக்‌ஷனா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ