Adipurush: அதிர வைக்கும் ஆதிபுருஷ் அப்டேட்..அடுத்த பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா..?

Adipurush Second Single: பிரபாஸ் நடிப்பில் தயாராகியுள்ள ஆதிபுருஷ் படத்தின் அடுத்த பாடலிற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : May 25, 2023, 06:50 PM IST
  • இராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம், ஆதி புருஷ்.
  • பிரபாஸ், கிருத்தி சனோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
  • இரண்டாவது பாடலின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Adipurush: அதிர வைக்கும் ஆதிபுருஷ் அப்டேட்..அடுத்த பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா..? title=

பிரபாஸ், கிருத்தி சனோன், சயிப் அலிகான் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதி புருஷ். பல மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இராமாயண கதை?

ஆதிபுருஷ் திரைப்படம், இராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதை, ஓம் ராவத் இயக்கியுள்ளார். இதில் ராமராக பிரபாஸ் நடிக்க ராவணனாக சைப் அலி கான் நடிக்கிறார். கதையின் நாயகியான சீதாவாக கிருத்தி சனோன் நடித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது.இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகிறது.

மேலும் படிக்க | Japan Update: கார்த்தி ரசிகர்களுக்கு ட்ரீட்..4 ஹீரோக்கள் சேர்ந்து வெளியிட்ட ‘ஜப்பான்’ இண்ட்ரோ வீடியோ..!

புது பாடல் வெளியீடு:

தற்போது அதிபுருஷ் திரைப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை பிரமாண்டமாக படக்குழு வெளியிட திட்டம் தீட்டி வருகிறது. ராம் சியா ராம் எனும் இந்த பாடலை ராம ஜோகய்யா சாஸ்திரி எழுதியுள்ளார். பாடலை படத்தின் இசையமைப்பாளர் சாசெட்-பரம்பரா பாடியுள்ளார். ராம் சியா ராம் பாடலை தொலைக்காட்சிகள்,காணொளி செய்தி  தொலைக்காட்சிகள்,  OTT  வாயிலாக என 70க்கும் பல ஊடகங்களின் மூலம் மே 29 அன்று உலகளவில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

நெட்டிசன்களின் கேலிக்கு ஆளான ஆதிபுருஷ்..!

கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கு உள்ளாகின. பல காட்சிகளை ஹாலிவுட்டில் வெளியான பல படங்களில் இருந்து காட்சிக்கு காட்சி அப்படியே நகலெடுத்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் ஆதாரங்களுடன் பதிவிட்டனர். இதனை கருத்தில் கொண்டு படத்தின் கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்த படக்குழு முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

ஆனால் ‘ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக இந்தியில் 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளை இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது. தெலுங்கில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் தமிழில் 30 லட்சம், கன்னடத்தில் 20 லட்சம், மலையாளத்தில் 30 லட்சம் பார்வைகளையும் இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது.

பட ரிலீஸ்:

ஆதிபுருஷ் படத்தினை டி சிரீஸ் பூஷன் குமார்‌ & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் இடம் பெற்றிருந்த கிராஃபிக்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கு கொடுமையாக இருந்ததால் அதைப்பார்த்த ரசிகர்களே பயங்கர கடுப்பாகி விட்டனர். இதனால் இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மீண்டும் புதுப்பிக்ப்பட்டு அதற்கான பணிகளும் நடைப்பெற்றது. இதையடுத்து, அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் படக்குழு இதனை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஹன்சிகா மோத்வானிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News