திருப்பதி கோயிலில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்..வைரல் வீடியோ!

Kriti Sanon: ஆதிபுருஷ் படத்தின் நாயகி கிருத்தி சனோனிற்கு, அப்படத்தின் இயக்குநர் முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 8, 2023, 09:58 AM IST
  • இம்மாதம் வெளியாகவுள்ள படம், ஆதிபுருஷ்.
  • ஆதிபுருஷ் நாயகி கிருத்தி திருப்பதிக்கு சென்றார்.
  • படத்தின் இயக்குநர் ஓம் ராத் அவருக்கு முத்தம் கொடுத்தார்.
திருப்பதி கோயிலில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்..வைரல் வீடியோ! title=

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிவரும் திரைப்படம் ஆதிபுருஷ். இராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், பிரபராஸ், கிருத்தி சனோன், சயிஃப் அலிகான் போன்ற பலர் நடித்துள்ளனர். 

ஆதிபுருஷ் நாயகி..

ஆதிபுருஷ் படத்தில், நடிகர் பிரபாஸ் ராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக சீதை கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். இந்தியில் மீமீ, ஷேஸ்தா, தில்வாலே போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஆதிபுருஷ் திரைப்படம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகவுள்ளதை தொடர்ந்து, இதற்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. நேற்று முன்தினம், இப்படத்தின் மாபெரும் விழா திருப்பதியில் நடைப்பெற்றது. நடிகர் பிரபாஸ், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரைத்தொடர்ந்து நடிகர் கிருத்தி சனோன் மற்றும் ஆதிபுருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் திருப்பதியில் நேற்று சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் படிக்க | அஜித் மச்சானுடன் நெருக்கம் காட்டிய யாஷிகா..விளக்கம் கொடுத்த நடிகையின் தாய்!

முத்தம் கொடுத்த  இயக்குநர்..

நாயகி கிருத்தி சனோன் உடன் திருப்பதி கோயிலுக்கு சென்ற ஆதிபுருஷ் படத்தின் இயக்குநர் செய்த செயல்தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. கோயிலுக்கு சென்று, சாமி தரிசனம் முடித்த பின்னர் நடிகை கிருத்தி சனோன் இயக்குநர் ஓம் ராவத்திற்கு “பாய்” சொல்ல மறந்து காரில் ஏறப்போனார். பின்னர் ஞாபகம் வந்தவர், இயக்குநர் ஓம் ராவத்தை கட்டிப்பிடிக்க சென்றார். அப்போது, அவர் கிருத்தி சனோனை கட்டிப்பிடிக்கும் முன்பு அவரது கண்ணத்தில் முத்தமிட்டார். பின்பு பறக்கும் முத்தம் வேறு கொடுத்தார்.

கிருத்தி, இதை கண்டுகொள்ளாததுபோல காரில் ஏறி சென்றுவிட்டார். இயக்குநர் செய்த இந்த காரியம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. 

“முத்தம் தானே…”

இயக்குநர், கிருத்தி சனோனிற்கு கண்ணத்தில் முத்தம் கொடுத்த வீடியாே வைரலானதை தாெடர்ந்து, இவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. காரணம், இவர் முத்தம் கொடுத்தது பிரச்சனை இல்லையாம், திருப்பதி காேவிலின் வாசலில் முத்தம் கொடுத்ததுதான் பிரச்சனையாம். ஒரு சில ரசிகர்கள், “வெளிநாட்டிலும் வட இந்தியாவிலும் சாதரணமாக பார்க்கப்படும் இந்த முத்த கலாச்சாரம், இங்கு மட்டும் ஏன் இழிவு செய்யப்படுகிறது” என சில ரசிகர்கள் கேள்வியெழுப்புகின்றனர். ஒரு சிலரோ, “கண்ணத்தில் கொடுத்த முத்தம்தானே…” என நக்கலாக மீம்ஸ் போட்டு வருகின்றனர். 

நெட்டிசன்களின் கேலிக்குள்ளான ஆதிபுருஷ்..

ஆதிபுருஷ் படத்திற்கு, தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் இல்லை எனினும் வரவேற்பு சுத்தமாக இல்லை. ஆதிபுருஷ் படத்தின் முதல் ட்ரெய்லர்வெளியான சமயத்திலேயே, பலரும் இப்படத்தினை வருத்தெடுத்தனர். அதற்கு காரணம் கொடுமையான விஎஃப்எக்ஸ், மார்ஃபிங் செய்யப்பட்டது போன்ற முகம் என கேலிக்குறிய பல அம்சங்கள் அந்த ட்ரெய்லர்இருந்தன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இதனால் இந்தியா முழுவதும் இந்த படம் மீம் டெம்ப்ளேட்டாக மாறியது. “இப்படியே போனால் நாம் எப்படி வண்டி ஓட்டுறது..” என எண்ணிய படக்குழு மீண்டும் ஆரம்பத்திலிருந்து கிராஃபிக்ஸ் காட்சிகளை ரீ-எடிட் செய்தது. சமீபத்தில், படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகி மீண்டும் பல நெட்டிசன்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமானது. “இதற்கு முதல் ட்ரெய்லரேபெட்டர்..” என சில ரசிகர்கள் கருத்துகளையும் தெரிவித்தனர். இந்த ட்ரெய்லர், வீடியோ கேம் போல உள்ளதாகவும் ஒரு கருத்து எழுந்தது. 

மேலும் படிக்க | கலகலப்பான காதல்.. ஹரிஷ் கல்யாணின் 'எல்ஜிஎம்' டீசர் வெளியானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News