பிரபுதேவா நடிப்பில் உருவாகிய லக்ஷ்மி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபுதேவா - தமன்னா நடிப்பில் தேவி படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய், அதன்பிறகு சாய்பல்லவி நடிப்பில் தியா படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் பிரபுதேவா நடிப்பில் ’லக்ஷ்மி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். நடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நடனக் கலைஞர்களை வைத்து கதைக் கரு அமைக்கப்பட்டுள்ளதால், நடிகர் பிரபு தேவாவை வைத்து திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகள் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதால் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக மும்பையைச் சேர்ந்த தித்யா என்ற நடனக் கலைஞரான சிறுமியை தேர்ந்தெடுத்துள்ளனர்.


இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். பேபி தித்யா ஒரு சிறுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். இந்தியில் நடனத்தை மையப்படுத்தி பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘ஏபிசிடி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘லட்சுமி‘ படமும் நடனத்தை மையமாகக் கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளது.


சமீபத்தின் இப்படத்தின் டீசர் மற்றும் வீடியோ பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மொத்தம் 12 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.