Palindrome: பிரபுதேவாவின் வினோதன் திரைப்படத்தில் இருவழி ஒக்குஞ்சொல் அமைந்த முதல் பாடல்
பிரபுதேவா தயாரிக்கும் வினோதன் தமிழ் திரைப்படத்தில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் திரைப்பட இசையமைப்பாளர் இமான்.
சென்னை: பிரபுதேவா தயாரிக்கும் வினோதன் தமிழ் திரைப்படத்தில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் திரைப்பட இசையமைப்பாளர் இமான்.
தயாரிப்பில் இருக்கும் தமிழ் திரைப்படம் வினோதனுக்காக புதுமையான பாடல் ஒன்று எழுதி பாடப்பட்டுள்ளது. பாலிண்ட்ரோம் என்பது ஒரு சொல் அல்லது சொற்றொடராகும், ஒரு சொல்லை முன்னிருந்து, பின் திருப்பிப் போட்டாலும், அர்த்தம் மாறாது. உதாரணமாக ’விகடகவி’. விகடகவி என்ற சொல்லை திருப்பி பார்த்தாலும் அதே சொல் தான் வரும்.
எளிமையாக சொல்வதென்றால், ஒரு சொல்லை திருப்பிப் போட்டாலும் அதே பொருள் வரும் சொல் இருவழி ஒக்க்குஞ்சொல் ஆகும்.
Also Read | 'நீங்கள் எனக்கு உதவுவீர்களா?': பி.சுசீலா ஏ.ஆர்.ரஹ்மானிடம் வைத்த சுவாரசியமான கோரிக்கை
இது ஓரிரு சொற்களுக்கு என்றால் பரவாயில்லை. ஒரு திரைப்படப் பாடலே பாலிண்ட்ரோம் (palindrome) எனப்படும் ’இருவழி ஒக்குஞ்சொல்’ கொண்டு அமைப்பது என்பது மிகவும் கடினமானது, சவாலானது. இந்த சவாலை மதன் கார்க்கி அற்புதமாக செய்திருக்கிறார்.
இது பற்றி திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரபுதேவா ஆச்சரியத்துடன் பேசும் வீடியோ இது:
பிரபுதேவா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குநர் விக்டர் ஜெயராஜ் இயக்கியுள்ளார்.
தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகளிலேயே இந்தப் பாடல் முதல் பாலிண்ட்ரோம் (இருவழி ஒக்குஞ்சொல்) பாடல் என்று கூறப்படுகிறது.
பாடகர் ஹரிச்சரனும், ஷாஷா திருப்பாதியும் பாடிய இந்த பாடல், பாலிண்ட்ரோம் இணையதளத்தில், DooPaaDoo (www.doopaadoo.com) ஒரு பாலிண்ட்ரோம் தேதியில், பாலிண்ட்ரோம் நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read | தனுஷின் கர்ணன்: Behind The Scenes எடுக்கப்பட்ட வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR