தனுஷின் கர்ணன்: Behind The Scenes எடுக்கப்பட்ட வீடியோ!

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் (Karnan) திரைப்படத்தில் எடுக்கப்பட்ட Behind The Scenes வீடியோ வெளியாகியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : May 26, 2021, 03:40 PM IST
  • மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ளார்.
  • கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி இந்த படம் வெளியானது
  • இந்த திரைப்படத்தில் எடுக்கப்பட்ட Behind The Scenes வீடியோ
தனுஷின் கர்ணன்: Behind The Scenes எடுக்கப்பட்ட வீடியோ!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் (Dhanush), லால், ரஜிஷா விஜயன், நட்டி நடராஜன், கெளரி கிஷன் மற்றும் யோகி பாபு நடிப்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன் (Karnan). 

கர்ணன் (Karnan) படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் மூலம் கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் (Dhanush) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கர்ணன் படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுவருவதாகவும் தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியானது முதலே செம்ம ஹிட் ஆனது. 

ALSO READ | தனுஷின் 19 வருஷ ரெக்கார்டு பிரேக்கிங், கர்ணன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எத்தனை?

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் எடுக்கப்பட்ட Behind The Scenes வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அமேசான் ப்ரைம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

முன்னதாக கொரோனா இரண்டாவது அலையின் தீவிரப் பரவலால் திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் 'கர்ணன்' திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். அதினவகையில் இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் மே 14ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News