பிரபுதேவா மும்பை மருத்துவரை மே மாதம் மணந்தார்: உறுதிபடுத்திய ராஜு சுந்தரம்
பிரபுதேவா முதலில் ஹிமானியை ஒரு மருத்துவ ஆலோசனை விஷயமாக சந்தித்தார். அவர் ஒரு பிசியோதெரபிஸ்ட்.
புதுடெல்லி: பிரபல நடன இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் பிரபுதேவா மும்பையைச் சேர்ந்த மருத்துவரை மே மாதம் திருமணம் செய்து கொண்டார் என்று அவரது சகோதரர் சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.
பிரபுதேவாவின் திருமணம் குறித்து யூகங்கள் பரவியிருந்தன. ஆரம்பத்தில் அவர் தனது மருமகளை திருமணம் செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மே மாதம் சென்னையில் நடந்த மிகவும் எளிமையான திருமண விழாவில் அவர் ஹிமானி என்ற மருத்துவரை மணந்தார் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பிரபுதேவாவின் மூத்த சகோதரர் ராஜு சுந்தரம், "உங்களிடமே விவரங்கள் உள்ளன. நாங்கள் எதுவும் புதிதாக சொல்லுவதற்கு இல்லை. பிரபுதேவாவின் திருமணம் குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்" என்றார்.
பிரபுதேவா (Prabhudeva) முதலில் ஹிமானியை ஒரு மருத்துவ ஆலோசனை விஷயமாக சந்தித்தார். அவர் ஒரு பிசியோதெரபிஸ்ட். பிரபுதேவா தனது முதுகு மற்றும் கால்களில் உள்ள பிரச்சனைக்காகவும், அதன் சிகிச்சைக்காகவும் ஹிமானியை சந்தித்தார். அவரிடம் சிகிச்சை பெற்றார். விரைவில், அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போகவே இருவரும் டேட்டிங் போகத் தொடங்கினர்.
ALSO READ: நம்மை பிரமிக்க வைக்கும் சிம்புவின் வேற லெவல் 'மாநாடு' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
பிரபுதேவாவும் ஹிமானியும் மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு, பிரபுதேவாவும் ஹிமானியும் சென்னையில் இரண்டு மாதங்கள் ஒன்றாக தங்கியிருந்தனர். அவர்கள் மார்ச் மாதம் ஒன்றாக சென்னைக்கு வந்தனர் என பிரபுதேவாவின் சகோதரர் அளித்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் அனைத்து கோவிட் -19 (COVID-19) விதிகளும் பின்பற்றப்பட்டு அவர்களின் திருமணம் நடந்தது.
இது பிரபுதேவாவின் இரண்டாவது திருமணமாகும். 47 வயதான இவர் முன்பு ராம்லதா என்பவரை மணந்தார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபுதேவா சில காலங்களுக்கு நடிகை நயன்தாராவுடனும் உறவு கொண்டிருந்ததாக பேசப்பட்டது.
ALSO READ: பிறந்த குழந்தைகளுக்கு உதவ 42 லிட்டர் தாய்ப்பாலை வழங்கிய பிரபலமான தயாரிப்பாளர்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR