கண்ணீருடன் வெளியேறிய பிரதீப் ஆண்டனி! ரெட் கார்ட் கொடுத்த கமல்!
Bigg Boss 7: பிரபலமான பிக்பாஸ் தொடரில் இருந்து பிரதீப் ஆண்டனி இந்த வாரம் ரெட்கார்ட் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Pradeep Antony Evicted: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட நான்கு வாரங்களை தாண்டிய நிலையில் தினசரி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி காண ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களாக வெற்றி பெற்று தற்போது ஏழாவது சீசன் நடைபெற்ற வருகிறது. கடந்த சீசர்களைப் போலவே இந்த சீசனிலும் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் பலர் இடம்பெற்ற இருந்தனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்த எவிக்ஷனில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி ஆகியோர் வெளியேறினர். மேலும், பவா செல்லத்துரை அவராகவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
மேலும் படிக்க | பைக் விபத்தின் போது TTF வாசன் ஹெல்மெட்டில் பதிவான வீடியோ வெளியானது!
கடந்த சீசன் களை போல் இல்லாமல் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக நடைபெற்று வருகிறது. ஒரு வீட்டிற்கு பதிலாக இரண்டு வீடுகள், பிக் பாஸ் மட்டும் இன்றி ஸ்மால் பாஸ் என பல்வேறு புதிய விஷயங்களை அமல்படுத்தியுள்ளனர். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் வைல்டு கார்டு மூலம் தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி, பிராவோ, அர்ச்சனா என 5 புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இதனால் வீட்டுக்குள் மீண்டும் 18 போட்டியாளர்கள் என்ற நிலை உருவானது. அருவி மற்றும் டாடா போன்ற படங்களில் நடித்து பிரபலமான பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக உள்ளார். பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் பிரதி ஆண்டனிக்கு அதிக ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. காரணம் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே எதார்த்தமாக இருக்கிறார் என்பதால் அவருக்கு மக்கள் இடத்திலும், சமூக வலைத்தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. மேலும் கமல்ஹாசன் வரும் எபிசோடுகளில் மக்கள் கைதட்டி பிரதீப்பிற்கு இருக்கும் ஆதரவை பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிரதீப் சக போட்டியாளர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவதாக சர்ச்சைகள் எழுந்தது. பிரதீப்புக்கும், கூல் சுரேஷுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் பிரதீப் அவரை ஒருமையில் திட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சக பிக் பாஸ் போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் வைல்டு கார்ட் போட்டியாளராக வந்த பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிர்ச்சிகரமான சம்பவமாக இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர்களில் பிரதீப் ஆண்டனியும் உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரெக்கார்ட் கொடுத்து கமல் பிரதீப்பை வெளியேற்றி உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பிக்பாஸ் போட்டியாளர்களை வெளியேற்ற மாட்டார்கள். ஆனால், இந்த முறை பிரதீப் வெளியேற்றப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் இணைந்த விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா கூட்டணி! தீபாளிக்கு வெளியாகும் ரெய்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ