பிக்பாஸ் 7: காதல் ஜோடியை பிரித்த பார்வையாளர்கள்! இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்?

Bigg Boss 7 Tamil Eviction: விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7-ல்  இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Nov 3, 2023, 12:25 PM IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன் நடந்தது.
  • இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார்.
  • அந்த போட்டியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸ் 7: காதல் ஜோடியை பிரித்த பார்வையாளர்கள்! இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? title=

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 ( Bigg Boss Season 7) வது சீசன் ஆரம்பித்துள்ளது. பிற சீசன்களை போலவே இந்த சீசனும் காரசாரமான சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. 

பிக்பாஸ் சீசன் 7:

2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, சில வாரங்களுக்கு முன்னர் 7வது சீசனில் அடியெடுத்து வைத்தது. 19 பேருடன் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் முதல் வாரமே எவிக்ஷன் தொடங்கியது. பிக்பாஸ் வீடு-ஸ்மால் பாஸ் வீடு, வித்தியாசமான டாஸ்குகள், அந்த டாஸ்குகளை முடிக்கவில்லை என்றால் புதிதாக தண்டனைகள் என இந்த சீசன் பிக்பாஸ் களை கட்டியது. போதாக்குறைக்கு ஓரிருவரை தவிர இந்த சீசனில் அனைவருமே இளைஞர்கள்தான். அதனால், இந்த போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு கிலுகிலுப்பாக உள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளது. 

இதுவரை வெளியேறிய போட்டியாளர்கள்:

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். வழக்கமாக இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கும் நாமினேஷன், ந்தசீசுனில் முதல் வாரத்திலேயே தொடங்கியதால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர். அனன்யா ராவ் வெளியான அடுத்த நாளே, பவா செல்லதுரை வெளியேறினார். இதையடுத்து, விஜய் வர்மா வெளியேறினார். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது. இதில் நடிகரும் பாடகருமான யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அந்த வாரமே வைல்ட் கார்ட் மூலம் 5 போட்டியாளர்கள் போட்டிக்குள் நுழைந்தனர். 

இந்த வார எவிக்ஷன்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே வந்த 5 பேரும் சீனியர் போட்டியாளர்களால் எவிக்ஷனிற்காக நாமினேட் செய்யப்பட்டனர். ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருக்கும் அவர்கள், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள ஐஷூ, அக்ஷயா, மாயா உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்த வார இறுதியில் இவர்களில் ஒருவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்படுவார். (Bigg Boss 7 Tamil Eviction) அவர் யார் தெரியுமா? 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: எவிக்ட் ஆன யுகேந்திரன்-வினுஷாவிற்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

யார் அந்த போட்டியாளர்? 

இந்த வாரம், பிக்பாஸ் ரசிகர்களிடம் இருந்து அதிகம் வெறுப்பை சம்பாதித்தவர், ஐஷூ. இவர், கடந்த சில நாட்களாக சக போட்டியாளரான நிக்ஸனுடன் ஒன்றாக நேரம் செலவழித்து வருகிறார்கள். ஐஷூ, தனக்கு வெளியில் காதலர் இருந்தும் நிக்ஸனுடன் நட்பை தாண்டி பேசி வருவது சக போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி, பிரதீப்பை பிறருடன் சேர்ந்து குறை கூறும் இவர், அவருடன் இருக்கையில் அவருக்கே சாதகமாக பேசுகிறார். இப்படி இவர் டபுள் கேம் ஆடுவது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர் இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

வேறு எந்த போட்டியாளர் வெளியேறலாம்..? 

பிக்பாஸ் வைல்டு கார்ட் கண்டஸ்டன்டாக உள்நுழைந்திருக்கும் தினேஷ் இந்த வாரம் வெளியேறுவார் என பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் யூகித்தனர். ஆனால், அவருக்கு பொது கருத்து கணிப்பிலேயே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. நாமினேஷனில் உள்ள பிற போட்டியாளர்களான அன்ன பாரதி, கானா பாலா, ஆர்.ஜே பிராவோ ஆகியோரும் வெளியேற வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News