கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பிரதீப் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் லவ் டுடே படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவானா மற்றும் ரவீனா ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 2K கிட்ஸை குறிவைத்து இந்தப் படம் தயாராகியிருப்பதாகவும் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் எனவும் படத்தை பார்த்தவர்கள் கூறிவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் ஹீரோவாக பிரதீப்பின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறதென்றும், தொடர்ந்து அவர் ஹீரோவாகவே நடிக்கலாம் எனவும் கூறிவருகின்றனர். அதேசமயம் பிரதீப்பின் நடிப்பிலும், உடல்மொழியிலும் தனுஷின் சாயல் தெரிகிறது. இப்படியோ போனால் இரண்டு படங்களை தாண்டி அவரால் ஹீரோவாக நிலைக்க முடியாதென்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். எது எப்படியோ லவ் டுடே படம் பெரும் ஹிட்டடித்திருக்கிறது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


சமீபத்தில் தெலுங்கிலும் வெளியாகி சக்கைப்போடு போடுகிறது லவ் டுடே. இந்தச் சூழலில் பிரதீப் ரங்கநாதன் ஒருவருக்கு நன்றி கூற மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து லவ் டுடே படத்தை 1997ஆம் ஆண்டு பாலசேகரன் என்பவர் இயக்கினார். அந்தப் படத்தின் தலைப்பைத்தான் பிரதீப் முறையாக வாங்கினார். ஆனால், தற்போதைய லவ் டுடே டைட்டில் கார்டில் விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தார் பிரதீப். அதேசமயம் அதன் இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. 



இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ லவ் டுடே என்ற தலைப்பை பயன்படுத்தும் போது அதை முதலில் உருவாக்கியவருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டேன். அது லவ் டுடே பட இயக்குனர் பாலசேகரன், காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியுள்ளீர்கள் . தலைப்பிற்கு நன்றி சார் மற்றும் தாராளமாக இருந்ததற்கும்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | தீவிரமாகும் நோய்... தென்கொரியாவில் சமந்தாவுக்கு சிகிச்சை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ