ப்ரின்ஸ், சர்தார் எந்த OTTயில் ரிலீஸ்... வெளியானது விவரம்

ப்ரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய படங்கள் எந்த ஓடிடியில் ரிலீஸ் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. தீபாவளிக்கு எப்படி புது உடை, பலகாரங்கள், பட்டாசுகள் என்பது வழக்கமாக இருக்கிறதோ அதேபோல் புது படங்கள் ரிலீஸாவதும் வாடிக்கை. ஒரு காலக்கட்டத்தில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி தீபாவளியை அதகளமாக்கும். ஆனால் காலப்போக்கில் அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து மூன்று படங்கள் வெளியானாலே ஆச்சரியம் என்ற நிலை தற்போது இருக்கிறது.
அப்படி இந்த தீபாவளியையொட்டி சிவகார்த்திகேயன் நடிப்பில் ப்ரின்ஸ் படமும், கார்த்தி நடிப்பில் சர்தார் படமும் இன்று ரிலீஸாகியிருக்கின்றன.டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களின் மூலம் சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறார். அந்த எதிர்பார்ப்புடன் ப்ரின்ஸ் தற்போது வெளியாகியிருக்கிறது. ப்ரின்ஸ் படம்தான் தீபாவளிக்கு ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் முதல் படமாகும்.
இன்று காலை முதலே ரசிகர்கள் ப்ரின்ஸ் படத்தை கொண்டாடிவருகின்றனர். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது. அதேசமயம் படத்தில் க்ரிஞ்ச் காமெடிகள் நிறைய இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேபோல் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் சர்தார் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே கார்த்தி நடித்த விருமன், பொன்னியின் செல்வன் 1 ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே இந்தப் படமும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே சர்தார் படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக ஜிவி பிரகாஷின் பின்னணி இசைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் மேக்கிங் ரீதியாகவும் படம் நன்றாக வந்திருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள். இதனால் இரண்டு படங்களுமே டீசண்ட்டான வெற்றியை பெறும் என திரை பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | சர்தார் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் எந்த ஓடிடியில் ரிலீஸாகும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ப்ரின்ஸ் பட உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றிருப்பதாகவும், சர்தார் பட ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இரு படங்களையும் மேற்கூறிய நிறுவனங்கள் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறதாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ