இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? பிரியா பவானி சங்கர் ஓபன்டாக்
இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘காதல் முதல் கல்யாணம் வரை’ என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரில் நடித்து பிரபலமான அவருக்கு ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
மேலும் படிக்க | நயன்தாராவின் ஃபிட்னஸ் மற்றும் பியூட்டியின் ரகசியம் இதுதானா?
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ஜூக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. இப்போது படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். அந்தளவுக்கு கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். அண்மையில் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடித்த ‘பொம்மை’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அவர் ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், காதலித்தபோதும் திருமணத்தில் ஆர்வம் காட்டாதது ஏன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என எண்ணியிருந்தேன். ஆனால், படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்ததால், திருமணத்தை அடுத்தடுத்து தள்ளிப்போட்டுக் கொண்டேபோக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார்
சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் பிரியா பவானி சங்கர் கூறியள்ளார். பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் "யானை', 'திருச்சிற்றம்பலம்', 'அகிலன்'.'பொம்மை', 'ருத்ரன்', குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன.
மேலும் படிக்க | கேஜிஎப்2 திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம் - கட்டணத்தை ரத்து செய்த அமேசான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR