அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வெளியிட்ட இடங்களில் எல்லாம் வசூலை வாரிக் குவித்தது. அல்லு அர்ஜூன் ஆக்ஷனில் மிரட்டியதற்கு இணையாக ராஷ்மிகாவுடனான ரொமான்ஸிலும் ஜொலித்தார். இவருக்கும் இடையே கெமிஸ்டிரி படு சூப்பராக இருந்தது. இடையே ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சமந்தா, குத்தாட்டம் போட, அந்த பாடல் அகில உலக ஹிடனாது.

 


 

நீண்ட நாட்களுக்குப் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டி அவர் நடித்தது ரசிகர்களையும் கட்டிப்போட்டது. இதனால், புஷ்பா 2 படத்தை எடுக்கவும் படக்குழு முடிவு செய்தது. அதற்கு கதை ஏற்கனவே ரெடியாக இருக்கும் நிலையில் பொருத்தமான கதாப்பாத்திரங்களை தான் படக்குழு தேர்வு செய்து வருகிறது. 2ஆம் பாகத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. முதல் பாகத்திலேயே அவரிடம் கதை சொல்லப்பட்டு தேதியும் கேட்கப்பட்டதாம். ஆனால், அப்போது பிஸியாக நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியால், புஷ்பாவில் நடிக்க முடியவில்லை. இப்போது 2ஆம் பாகத்தில் நடிக்க வேண்டும் என மீண்டும் படக்குழு கேட்க, கீரின் சிக்னல் கொடுத்துவிட்டாராம்.

 


 

விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அவருடைய மார்க்கெட் உட்சத்தில் இருப்பதால், புஷ்பா 2வில் நிச்சயம் அவர் இருக்க வேண்டும் என்பதை அல்லு அர்ஜூனும் விரும்பினாராம். இதற்கிடையே, அவருக்கு ஜோடியாக முன்னாள் டாப் ஹீரோயின் நடிக்க இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. பருத்திவீரன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த பிரியாமணி, மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அட்லீயின் ஷாரூக்கான் படத்தில் நடித்திருக்கும் அவர், இப்போது புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவரும் ஒகே சொல்லிவிட்டால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட படக்குழு தயாராக இருக்கிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ