அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவர்கொண்டா. அந்தப் படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டின. மேலும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் சேர்ந்தது. இதனையடுத்து பிஸியான அவர் தமிழில் நோட்டா படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த டியர் காம்ரேட் தமிழிலும் வெளியானது. அந்தப் படமும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் விஜய் தேவரகொண்டாவை பலரும் ரசித்தேவருகிறார்கள். தெலுங்கும், தமிழில் மட்டும் நடித்துவந்த தேவரகொண்டா தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லைகர் படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இதில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருக்கிறார். மேலும் இவர்களோடு அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் பலரையும் கவர்ந்தது. இந்தப் படம் தவிர்த்து விஜய் தேவரகொண்டா தெலுங்கில் ஜனகனமன படத்திலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு குடிப்பழக்கம் உள்ளது. ஒரு பிறந்தநாள் விழா விருந்துக்கு சென்று நன்றாக குடித்துவிட்டு வந்தேன். காலையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். போதை குறையாமலேயே எழுந்து படப்பிடிப்புக்கு சென்றேன். படத்தின் கதாபாத்திரத்துக்காகவும் குடிக்க வேண்டி இருந்தது. இதனால் எனக்கு போதை அதிமாகிவிட்டது. வசனம் சொல்ல வேண்டுமென்பதை மறந்துவிட்டு உளற ஆரம்பித்தேன். பைத்தியக்காரன்போல் சிரிக்கவும் செய்தேன். இதனால் வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டனர்” என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | கடைசி விவசாயிதான் எஞ்சாயி எஞ்சாமிக்கு முக்கிய காரணம் - விளக்கம் கொடுத்த தீ
மேலும் படிக்க | வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை: தொடரும் திரைத்துறை ரெய்டுகள்
மேலும் படிக்க | எஞ்சாயி எஞ்சாமி மெட்டு என்னுடையதுதான் - தெருக்குரல் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ