தமிழ் திரைப்படங்களின் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடப்பதால் அங்கிருக்கும் தொழிலாளர்கள்தான் பிழைக்கிறார்கள் தமிழ் சினிமா தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது; எனவே தமிழ் ஷூட்டிங் தமிழகத்திலேயே நடக்க வேண்டுமென்று நீண்ட நாள்களாக கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. ஆனால் அஜித், ரஜினி உள்ளிட்ட பெரிய பட நடிகர்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடப்பதே வழக்கமாக இருக்கிறது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் இந்த விவகாரம் குறித்தும், பெரிய நடிகர்கள் குறித்தும் நாட் ரீச்சபிள் பட இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் பேசினார்.
ராஜன் பேசுகையில், “சினிமாவை தற்போது வாழ வைப்பது சின்ன பட்ஜெட் படங்கள்தான். இந்த பெரிய பட்ஜெட் படங்கள் பண்றவங்க தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய துரோகம் செய்றாங்க. அவர்கள் அனைவரும் பிழைக்கிறார்கள். தமிழ் சினிமாவை காப்பாற்றவில்லை. எடுப்பது தமிழ் படம். அதில் நடிப்பது தமிழ் ஹீரோ. படத்தை பார்ப்பது தமிழ் ரசிகர்கள். ஆனால் ஷூட்டிங் நடப்பதோ ஆந்திரா, ஹைதராபாத்தில். அந்த மாநில ஆள்களை வைத்து வேலை வாங்கினால் தமிழ் சினிமா ஆள்களை யார் பார்ப்பது. இதுகுறித்து ரஜினியிடமும் வேண்டுகோளாகவே வைத்தேன். சினிமா எடுக்கும் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும்.
பெரிய நடிகர்களுக்கு என்ன நோவு.ஜம்முன்னு குளு குளு கார்ல வர்றீங்க. கேரவன் ஏசில ஜாலியா சீட் ஆடுறீங்க. அப்புறம் குஜால் எல்லாம் பண்றீங்க. ஷாட்டுக்கு அழைத்தால் ஒழுங்கான நேரத்துக்கு வருவதில்லை. ஒரு மணிநேரம் லேட் பண்ணா எவ்வளவு பணம் விரயம் தெரியுமா?
கேரவனில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதற்கு பவுன்சர். மறுபடியும் கேரவனுக்கு செல்ல பவுன்சர். அப்படி என்ன கெட்டது பண்ணிட்ட. தீவிரவாதியா நீ. இங்கே தயாரிப்பாளர்களுக்குதான் பாதுகாப்பு இல்லை. ஐம்பது லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோ நடிக்கும் படத்தைவிட ஐந்து லட்சம் ரூபாய்சம்பளம் வாங்கும் சின்ன ஹீரோ நடிக்கும் சின்ன பட்ஜெட் படங்கள் நன்றாக ஓடுகிறது. அதே மாதிரி இந்த நாட் ரீச்சபிள் படம் மக்களிடம் ரீச் ஆகும். கதைதான் முக்கியம் கதாநாயகர்கள் அல்ல” என்றார்.
மேலும் படிக்க | குடித்துவிட்டு ஷூட்டிங் போனேன் ரத்து செய்துவிட்டார்கள் - விஜய் தேவரகொண்டா பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ