விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் மற்றும் டிடி-க்குப் பிறகு பிரபலமாக இருக்கும் தொகுப்பாளர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் இவர்கள் இருவரும் அல்லது இவர்களில் யாரேனும் ஒருவர் நிச்சயம் இருப்பார்கள். அந்தளவுக்கு காமெடி, கலாட்டா மூலம் மக்களை வசியப்படுத்தி வைத்துள்ளனர். இதில் பிரியங்கா விஜய் டிவியில் எந்த தொகுப்பாளரும் செய்யாத ஒரு விஷயத்தை முதன்முறையாக முயற்சி செய்தார். அதாவது, பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு போட்டியாளராக களம் புகுந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரியோ சென்றிருந்தாலும், அவர் பிக்பாஸூக்கு பிறகுதான் விஜய் தொலைக்காட்சியில் முழு நேர தொகுப்பாளராக வந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரியங்காவின் என்ட்ரி, பெரியளவில் பேசப்பட்டது. நிகழ்ச்சிக்கும் கூடுதல் லைம் லைட்டைக் கொடுத்தது. அவருடைய நடவடிக்கைகள் தினம்தோறும் விமர்சனத்துக்குள்ளானது வேறு கதையாக இருந்தாலும், பிரியாங்கா பிக்பாஸில் இருக்கும் வரை அந்த நிகழ்ச்சிக்கு பக்கா டிஆர்பி ரேட்டிங்கை கொடுத்துக் கொண்டிருந்தார். 


மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா


ஒருகட்டத்தில் அவருடைய பெயர் பெரியளவில் டேமேஜ் ஆகிறது. டிரோல் மெட்டீரியலாக இருக்கிறார் என்பதை உணர்ந்த பின்னரே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சிறிது காலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக களம் காண்பதில் இருந்து தள்ளியிருந்த பிரியங்கா, மீண்டும் பழைய பிரியங்காவாக என்டிரி கொடுத்தார். அப்போது முதல் இன்று வரை தான் சந்தித்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கி, தொகுப்பாளினி வரிசையில் உச்சாணிக் கொம்பிலேயே உட்கார்ந்திருக்கிறார்.


அந்தவகையில் தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் காமெடி கவுண்டர்கள் மற்றும் ஜாலியான ஆங்கரிங் ஸ்டைலை மட்டும் பார்த்து பழகிய ரசிகர்கள், அவரது நடனத் திறனைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் அங்கு விடுமுறை நாளை கொண்டாட சென்றுள்ளார். அங்கு மிகவும் சந்தோஷமாக நடு ரோட்டில் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோவை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது இந்த வீடியோ படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அத்துடம் இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.



இதற்கிடையில் தற்போது தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே ராஜூ வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் அவர் ராஜு ஜெயமோகனுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அத்துடன் விரைவில் மற்றொரு ரியாலிட்டி ஷோவையும் பிரியங்கா தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.