’அலப்பறை ஆரம்பம்’ பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பிரியங்கா
பிக்பாஸ் அல்டிமேட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திடீரென பிரியங்கா வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பிக்பாஸ் முடிந்தவுடன் சுடச்சுட கையோடு ஆரம்பிக்கப்பட்டது பிக்பாஸ் அல்டிமேட். விஜய் டிவியில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ், ஒடிடி அவதாரத்துக்கு ஏற்றவாறு இம்முறை வடிவமைக்கப்பட்டது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் ஷோ திட்டமிடப்பட்டது. கடந்த 5 சீசன்களில் ஜொலித்த போட்டியாளர்கள், பிக்பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கினர்.
மேலும் படிக்க | பிரபாஸின் அமெரிக்க பயணம் - ஹாலிவுட் படத்திற்கா இல்லை அறுவை சிகிச்சைக்கா?
சிநேகன், தாடி பாலாஜி, ஜூலி, தாமரை, பாலா, நிரூப், வனிதா, ஸ்ருதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 60 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இப்போட்டி, இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இதனையொட்டி பல அதிரடிகள் பிக்பாஸ் அல்டிமேட்டில் அரங்கேறி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் அபிராமி இரவு நேரத்தில் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். நேற்று ஜூலியை எவிக்ட் செய்த பிக்பாஸ், புதியதாக பிரிங்காவை வீட்டில் களமிறக்கியுள்ளது.
அதாவது, இவ்வளவு நாள் வீட்டில் இருந்த போட்டியாளர்களை மகிழ்விக்கும் நோக்கில் பிக்பாஸ் டீம் பிரியங்கா மற்றும் பாவனியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இது தொடர்பாக வெளியாகிருக்கும் புரோமோவில், பிக்பாஸ் அல்டிமேட் டோர் ஓபன் செய்யப்பட்டவுடன், பிரியங்கா மற்றும் பாவனி வீட்டிற்குள் வருகின்றனர். அவர்கள் இருவரையும் பார்த்து உற்சாகத்தில் குதிக்கும் ஹவுஸ்மேட்ஸ், ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர். நிரூப் ஓடிச் சென்று பிரியங்கா மற்றும் பாவனியை கட்டியணைந்து அழத் தொடங்குகிறார். அவரை ஆறுதல்படுத்தும் பிரியங்கா, வழக்கம்போல் ஜாலி செய்கிறார். இந்த புரோமோ வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவிலேயே முதல்முறை... பீஸ்ட் பட கேமரா பற்றிய தகவல்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR