பிரபாஸின் அமெரிக்க பயணம் - ஹாலிவுட் படத்திற்கா இல்லை அறுவை சிகிச்சைக்கா?

பிரபாஸ் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 8, 2022, 01:26 PM IST
  • அமெரிக்கா செல்லும் பிரபாஸ்
  • பிரபாஸுக்கு அறுவை சிகிச்சை
  • ஹாலிவுட்டில் நடிக்கும் பிரபாஸ்
பிரபாஸின் அமெரிக்க பயணம் - ஹாலிவுட் படத்திற்கா இல்லை அறுவை சிகிச்சைக்கா? title=

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் அடையாளப்பட்டார். அதன் பிறகு அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவானது. மேலும் பிரபாஸின் சம்பளம் 100 கோடி ரூபாய்வரை அதிகரித்திருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

சமீபத்தில் பூஜா ஹெக்டேவுடன் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் அப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பிரபாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

Prabhas

இதனையடுத்து அவர் சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், பிரபாஸ் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுனிவெர்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்துக்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் பட ஒப்பந்தத்தில் பிரபாஸ் கையெழுத்திட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மொழிக்கும், உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - கேஜிஎஃப் யஷ்

இதற்கிடையே, பிரபாஸின் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்படவிருப்பதாகவும் அதற்காக பிரபாஸ் அமெரிக்கா செல்கிறார் எனவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

Prabhas

இந்தச் சூழலில் பிரபாஸ் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் காரணமாக, பிரபாஸ் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறாரா இல்லை ஹாலிவுட் பட பேச்சுவார்த்தைக்காக செல்கிறாரா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதேசமயம், அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு ஹாலிவுட் படம் தொடர்பாக பேச்சுவார்த்தையை அவர் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ‘அஜித்-61’ : கதை பிறந்த பின்னணி இதுதான்! 3ஆவது முறையாக க்ரீன் சிக்னல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News