தயாரிப்பாளர் சங்க தேர்தல்: 6-ம் தேதி பதவியேற்பு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளாக விஷாலின் ‘நம்ம அணி’ பெரும்பான்மையுடன் தேர்வாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் விஷால் 478 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 335 வாக்குகள், கே.ஆர் 224 வாக்குகள் பெற்று இருந்தார்.
இந்நிலையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் ஏப்ரல் 6-ம் தேதி வியாழக்கிழமை மாலை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.