லிங்கா படம் நட்டம் என பிரச்சனையை கிளப்பிய சிங்காரவேலன் கைது
நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் நடிகர் விமல் கொடுத்த பண மோசடி புகாரின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் விருகம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சிங்காரவேலனின் நண்பர்கள் கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் – விமல் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சிங்காரவேலன் தன்னுடைய பெயரை பயன்படுத்தி போலியான ஆவணங்கள் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக விமல் புகார் கொடுத்திருந்தார்.
மேலும் படிக்க | சமீபத்தில் வெளியான டாப் நடிகர்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
அந்த புகார் தொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு சிங்காரவேலன் மற்றும் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் சிங்காரவேலன் நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்றார். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றம் சிங்காரவேலனுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. குறிப்பாக ஒரு மாதத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு சிங்காரவேலன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அந்த உத்தரவை சிங்காரவேலன் பின்பற்றாத காரணத்தால் முதல் வழக்கில் சிங்காரவேலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரண்டாவது ஒரு புகாரும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் விமல் கொடுத்திருக்கிறார், அது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் சிங்காரவேலன், கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விமல் நடித்து இருக்கக்கூடிய விலங்கு என்ற வெப் சீரியஸ் தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், தன்னுடைய பெயரை பயன்படுத்தி போலியான காசோலைகள் மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சிங்காரவேலன் மீது நடிகர் விமல் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், அந்த வழக்கில் தற்போது சிங்காரவேலனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிங்காரவேலன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். 2014ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படம் மிகப்பெரிய நஷ்டமடைந்தது என்று விநியோகஸ்தர்களை கூட்டி சென்னையில் பல நாட்கள் போராடி, ரஜினியிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்றவர் இந்த சிங்காரவேலன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சூர்யாவின் மற்றொரு நெகிழ்ச்சி செயல்! பாராட்டும் காவல்துறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR