ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள "புலிமடா" படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ.கே.சஜன், புலிமட படத்தை எழுதி, இயக்கி, எடிட்டிங்கும் செய்துள்ளார்.  ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்து உள்ளனர். இயக்குனர் ஜோஷி மற்றும் ஜோஜுவின் ஆண்டனி படமும் ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோடி கோடியாய் வசூலை குவிக்கும் ஜெயிலர்..! முதல் நாளே இவ்வளவு கலெக்‌ஷனா..?


பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த "இரட்டா" படத்திற்குப் பிறகு ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் அடுத்த படம் "புலிமடா". இப்படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  60 நாட்களில் ஒரே ஷெட்யூலில் படமாக்கப்பட்டு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் புலிமடா. தமிழில் சூப்பர் ஹிட்டான ஜெய் பீம் படத்திற்கு பிறகு புலிமடா படத்திலும் லிஜோமாள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா, பாலச்சந்திர மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 



போலீஸ் கான்ஸ்டபிள் வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) திருமணமும், அது தொடர்பான நிகழ்வுகளும், அவரது குணாதிசயத்திலும், வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களும் புலிமடா மூலம் பார்வையாளர்களுக்கு முன்வைக்கப்படுகின்றன. தலைப்பிற்கு ஏற்றாற்போல், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க உள்ளார் இயக்குனர் ஏ.கே.சஜன். வயநாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்த விவசாயி ஜோஜு மற்றும் அபுதாபியில் வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் இடையே நடைக்கும் கதை தான் புலிமடா. டார்க் காமெடி வடிவில் இந்த படம் உருவாகி உள்ளது. என்றும் இயக்குனர் கூறி உள்ளார்.



படக்குழு: 
இசை - இஷான் தேவ்.
பாடல் வரிகள் - ரபிக் அகமது, டாக்டர் தாரா ஜெயசங்கர், தந்தை மைக்கேல் பனச்சிகல்.
பின்னணி இசை - அனில் ஜான்சன். எடிட்டர்- ஏ.கே.சாஜன்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் -வினேஷ் வங்காளன்
கலை -ஜித்து செபாஸ்டியன்.
ஒப்பனை -ஷாஜி புல்பள்ளி
ஆடை வடிவமைப்பு - சுனில் ரஹ்மான் மற்றும் ஸ்டெஃபி சேவியர்.
தலைமை இணை இயக்குனர் - ஹரிஷ் தெக்கேபட்.
ஸ்டில்ஸ் - அனூப் சாக்கோ,
வடிவமைப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் -ஒப்ஸ்குரா என்டர்டெயின்மென்ட், ஓல்ட்மங்க்ஸ்.
விநியோகம் - ஆன் மெகா மீடியா
டிஜிட்டல் - தனய் சூரியா


மேலும் படிக்க | ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாங்கிய சம்பளம் இவ்வளவா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ