புஷ்பா 2 படப்பிடிப்பு: தெலுங்கு திரைப்படத்துறை சமீபத்திய நாட்களில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பல தெலுங்கு திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்டு வருகின்றன. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கும். இந்த ஆண்டும் பல அதிரடி தெலுங்கு படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. இப்படிப்பட்ட மாஸ் எண்டர்டெய்னர் படங்கள், பெரும்பாலும் பல மொழிகளில் எடுக்கப்படுகின்றன, அல்லது மொழிபெயர்க்கப்படுகின்றன. இவை இந்திய அளவிலும், பெரும் வெற்றிகளை குவித்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புஷ்பா: தி ரூல்


அதிரடி வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா: தி ரூல்’ 2023 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. படத்தின் புதிய படப்பிடிப்பு ஷெட்யூல் விரைவில் விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது. படப்பிடிப்பிற்காக, படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் கடற்கரை நகரமான விசாகபட்டினத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு அபார வரவேற்பு அளிக்கப்பட்டது.



விசாகப்பட்டினத்தில் அல்லு அர்ஜுன்


விசாகப்பட்டினத்தில் அல்லு அர்ஜுனின் வீடியோக்கள் மற்றும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. விமான நிலையத்திலேயே அவரை ஏராளமான ரசிகர்கள் வரவேற்றதை வீடியோவில் காண முடிகின்றது. அவரது காரை சாலையில் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவரது காரின் மீது அவர்கள் மலர் இதழ்களை வீசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 



மேலும் படிக்க | மனோஜ்குமார் மஞ்சு - வருண் இணையும் “வாட் த ஃபிஷ்” 


புஷ்பாவின் முதல் பாகம், செம்மர கடத்தலின் நிழல் உலகை சார்ந்த ஒரு தினசரி தொழிலாளியைப் பற்றியது. ரங்கஸ்தலம் புகழ் சுகுமார் இயக்கிய இப்படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. புஷ்பராஜ் என்ற அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் தனது எழுச்சிக்குப் பிறகு தனது செம்மர சாம்ராஜ்ஜியத்தை எப்படி ஆள்கிறார் என்பதுதான் இரண்டாம் பாகத்தின் கதையாகும்.



அல்லு அர்ஜுனைத் தவிர, இந்த படத்தில், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் மற்றும் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தில் வந்த "ஓ சொல்றியா” மற்றும் "ஸ்ரீவல்லி" போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே மாஸ் ஹிட்டாகின. 


மேலும் படிக்க | தொகுப்பாளினி புத்தகத்தை வெளியிட்ட கார்த்தி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ