இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த, 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். வில்லனாக சுனிலும், முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசிலும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதே அளவிற்கு இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் புஷ்பா 1 படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பீக்கில் இருந்த சமயத்தில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது 'புஷ்பா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 


மேலும் படிக்க | மறக்காது கோபால்... ஏ.ஆர் ரஹ்மான் மறக்குமா நெஞ்சம் கச்சேரியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்


புஷ்பா 2 புதிய ரிலீஸ் தேதி வெளியீடு:


இந்நிலையில் புஷ்பா 2 ( புஷ்பா தி ரூல் ) படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. புஷ்பா 2 படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று வெளியாகும் என அறிவித்துள்ளது. புஷ்பா 2 படம் பார்க்க இன்னும் ஒரு வருஷம் காத்து இருக்கனுமா என சில ரசிகர்கள் நொந்து போனார்கள். இன்னும் சிலரோ படம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இருக்கும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



புஷ்பா 2 டிரைலர்: 


முன்னதாக புஷ்பா 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று ஏப்ரல் மாதம் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. அந்த டிரைலரில், சிறையில் இருந்து தப்பிச்சென்ற புஷ்பாவை காவல்துறையினர் சுட்டுகொன்று விட்டனர் என்றும், புஷ்பா வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்றும் செய்தி பரவி வருகிறது. 


புஷ்பா (தி ரூல்) நடிகர், நடிகைகள்:


புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகாவே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் பகத் பாசில், சுனில், அனுஷ்யா பரத்வாஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப்படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


‘புஷ்பா-2’ வின் ஓடிடி ரைட்ஸ் யாருக்கு: 


முதல் பாகத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியது. அதனால் இப்படத்தையும் அதுவே வாங்கும் எனக் கூறப்பட்டுவந்தது. ஆனால் மற்றொரு பிரபல ஓடிடி நிறுவனமான டிஷ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனமும் இப்படத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாம். இரு நிறுவனங்களும் பெரும் தொகை கொடுத்து இதனை வாங்கத் தயாராக உள்ளனவாம். இதனால் புஷ்பா- 2 வை எந்த நிறுவனம் கைப்பற்றப்போகிறது எனும் எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.


மேலும் படிக்க | “நெருப்புடா..” மலேசிய பிரதமரை சந்தித்த ரஜினிகாந்த்! என்ன காரணம்..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ