ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரவி. கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து ரவி ஜெயம் ரவியாக மாறினார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த ஜெயம் ரவிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறார். படமானது செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் ஜெயம் ரவி இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி சினிமாவுக்கு வந்து 20 வருடங்களையும் நிறைவு செய்திருக்கிறார். எனவே பிறந்தநாள் மற்றும் 20 வருடங்களை நிறைவு செய்ததையொட்டி விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



சென்னையில் நடந்த இந்த விழாவில் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகன்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஜெயம் ரவி, 20 வருடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தது குறித்து விளக்கம் அளித்தார்.


மேலும் படிக்க | அவர் கலந்துகொண்ட ஒரே படப்பிடிப்பு அதுதான் - மகாராணி மறைவுக்கு கமல் இரங்கல்


விழாவில் பேசிய அவர், “சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு எனது அண்ணன் மோகன் ராஜாதான் காரணம். வெற்றி கொடுத்தாலும் நல்ல படங்களை மட்டும் பண்ண வேண்டும், அதற்காக காத்திருக்க வேண்டும் என அப்பா சொல்வார். அதனால்தான் நான் இந்த 20 ஆண்டுகளில் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். இதனால் எனக்கு தோல்வி படங்களும் குறைவு” என்றார்.


ஜெயம் ரவியும், மோகன் ராஜாவும் இணைந்த ஜெயம், எம்.குமரன் S/o மகாலட்சுமி, தில்லாலங்கடி, தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை


மேலும் படிக்க | புஷ்பா 2வில் களமிறங்கும் சாய்பல்லவி: சுவாரஸ்யமான கதாப்பாத்திரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ