இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயத அவரது உயிரிழப்பு செய்தியை பக்கிங்காம் அரண்மனை உறுதி செய்தது. இதனையடுத்து அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் எலிசபெத்  மறைவுக்கு இரங்கல் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் மகாராணி எலிசபெத்துக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.


25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.


 



5 ஆண்டுகளுக்கு முன்னர்  லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


 



முன்னதாக கடந்த 1997ஆம் ஆண்டு அவர் மூன்றாவது முறையாக இந்தியா வந்திருந்தார். அப்போது சென்னை தரமணி எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடந்த மருதநாயகம் பட தொடக்க விழாவில் அவர் கலந்துகொண்டார். சுமார் 20 நிமிடங்கள் அங்கு இருந்த அவருடன் கமல் ஹாசன், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் இருந்தனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ