தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மச்சானும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், நட்சத்திர தம்பதி ராஜசேகர் மற்றும் ஜீவிதா மீது அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இதன் தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நட்சத்திர தம்பதி: 


தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர், ராஜசேகர். தமிழ்நாட்டை சேர்ந்த இவர், சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களும் நடித்து பிரபலமானவர். இவருடைய மனைவி ஜீவிதாவும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். நட்சத்திர தம்பதியாக வலம் வரும் இவர்கள், பிரபல நடிகர் ஒருவர் குறித்து கூறிய குற்றச்சாட்டுகளினால் இன்று சிறைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். என்ன நடந்தது..? 


மேலும் படிக்க | Kamal Haasan: அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்..! எதற்காக தெரியுமா..?


சிரஞ்சீவி மீது குற்றச்சாட்டு:


டோலிவுட்டின் திரையுலகை ஆட்சி செய்து வருகிறது, நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம். இவர்களின் பிள்ளைகள் முதல் உறவினர்கள் வரை எல்லோரும் குடும்பமாக தெலுங்கு  திரையுலகில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் நடிப்பு மட்டுமன்றி அரசியலும் ஆக்டிவாக உள்ளனர். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவி அவ்வப்போது மக்களுக்கு தேவைப்படும் விஷயங்களை செய்து கொடுப்பது, தொண்டு நிறுவனங்களை நடத்துவது என்று தன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிரார். இவர், ஒரு ரத்த வங்கியையும் நடத்தி வருகிறார். 


கடந்த 2011ஆம் ஆண்டு நட்சத்திர தம்பதியான ராஜசேகர் மற்றும் ஜீவிதா ஆகியோர் சிரஞ்சீவி நடத்தி வரும் ரத்த வங்கி குறித்து பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றினை முன் வைத்தனர். சிரஞ்சீவியின் ரத்த வங்கி என்ற பெயரில் ரத்தத்தை சேமித்து அதை பிளாக் மார்கெட்டில் விற்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இது திரையுலகினரிடையேயும் சிரஞ்சீவி ரசிகர்கள் இடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து சிரஞ்சீவியின் மச்சானும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 


அல்லு அரவிந்த் தொடர்ந்த வழக்கு: 


சிரஞ்சீவியின் மச்சானும் பல படங்களை தயாரித்தவருமான அல்லு அரவிந்த், ராஜசேகர்-ஜீவிதா தம்பதியினர் ரத்த வங்கி குறித்து கூறிய குற்றச்சாட்டு கூறியதை அடுத்து, இவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 12 வருடங்களாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில், இவர்களின் அவதூறு வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அதை நாம்பல்லி என்ற தலைமை நீதிபதி விசாரித்தார். இறுதியில், ராஜசேகர்-ஜீவிதா தம்பதியனுக்கு 5 லட்ச ரூபாய் அபராதமும் சிரஞ்சீவி குறித்து அவதூறு பரப்பியதற்கு 1 வருட ஜெயிலும் தண்டனையாக விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தம்பதியினர் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்துள்ளனர். 


என்ன பிரச்சனை..? 


தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை, ஆரம்பத்திலிருந்தே ராஜசேகர்-ஜீவிதா தம்பதியினருக்கும் சிரஞ்சீவிக்கும் ஒத்துவரவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ராஜசேகரும் ஜீவிதாவும் சினிமா துறையில் உள்ள கலைஞர்கள் சந்திக்கும் நடிகர் சங்க விழாவில் கலந்து கொண்டனர், இதில், நடிகர் சிரஞ்சீவியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் மேடையேறி பேசுகையில் ராஜசேகர் அவரது பேச்சை இடை மறிக்கும் வகையில் மேடையேறி அப்போது தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நரேஷ் என்பவருக்கு எதிரான கருத்துகளை பேசினார். 


அவரால் தான் பல பட வாய்ப்புகளை இழந்ததாக ராஜசேகர் கூறியிருந்தார். இந்த செயலை சிரஞ்சீவி வன்மையாக கண்டித்தார். இதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை அஎடுக்க வேண்டும் என்றும் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அவர் கூறினார். இது போல இருவருக்கும் இடையில் பல சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் உள்ளான பகை 2003ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | குக் வித் கோமாளி அஷ்வினுக்கு விரைவில் திருமணம்..? மணப்பெண் யார் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ