உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் மூலம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஏற்கனவே நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனி கோட்டையை நோக்கி பயணிப்போம் என கூறியிருந்தார். நேற்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தனது இல்லத்தில் சந்தித்து பேசிய பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது அவர் கூறியதாவது:- தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன், தமிழகத்தில் அடுத்த 100 நாட்களில் தேர்தல் வந்தால், அதில் என்னுடைய பங்கு இருக்கும் எனவும், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன் என கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியுள்ளார். 


மேலும் ரஜினிகாந்தை சந்தித்து பலமுறை அரசியல் குறித்து பேசியுள்ளேன். எனக்கும் ரஜினிக்கும் ஒரே கொள்கை தான். இந்த நாட்டில் உள்ள ஊழலை ஒழிப்பது. நாங்கள் இருவரும் அரசியலுக்கு வந்தால், நல்ல அரசியலுக்கு ஒரு உதாரணமாக இருப்போம். அதேவேளையில் நல்ல நண்பர்களாகவும் இருப்போம் என தெரிவித்தார்.