மலேசியாவில் இயங்கி வரும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation) என்ற தனது சொந்த நிறுவனம் மூலம் தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிட்டு வருபவர் டத்தோ அப்துல் மாலிக். கபாலி போன்ற பல படங்களை இவருடைய நிறுவனம் வெளிநாடுகளில் வெளியிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கெளதம் மேனன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்?


இந்நிலையில், இந்த நிறுவனத்தை அணுகிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி ராமசாமி, ரஜினியின் ’பேட்ட’, ராகாவா லாரன்ஸின் ’காஞ்சனா 3’ மற்றும் தனுஷின் ‘ருத்ரன்’ ஆகிய 3 படங்களுக்கான பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக அப்துல் மாலிக்கிடம் கூறியுள்ளார். மேலும், இதன் பதிப்புரிமையை அவருக்கு தருவதாக கூறி 30 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.


ALSO READ | ALSO READ | எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்!


ஆனால், ஒரு கட்டத்தில் அவரிடம் ’பேட்ட’ படத்தின் பதிப்புரிமை இல்லை என்று மாலிக்கின் ’ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனத்துக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து முரளியிடம், மாலிக் முறையிட்டு கேட்டபோது 15 கோடி ரூபாய் கொடுத்து சமாளித்துள்ளார். அதன்பிறகு காஞ்சனா 3 மற்றும் ருத்ரன் ஆகிய படங்களின் பதிப்புரிமையும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியிடம் இல்லை என்பது அப்துல் மாலிக்கிற்கு தெரியவந்துள்ளது. 



தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியிடம் எஞ்சிய பணத்தை கேட்டுள்ளார். ஆனால், முரளி பணம் கொடுக்க மறுத்தத்துடன், தமிழ்நாட்டில் என்னை மீறி உங்கள் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மீது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சென்னை மூலம் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் கீழ் தேனாண்டாள் முரளி ராமசாமி மீது சென்னை காவல்துறையினர் மோசடி வழக்கும் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR