விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்தைப் பார்த்து ரஜினி பாராட்டியதாக அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமனிதன். யுவன் தயாரித்துள்ள இப்படத்துக்கு இளையராஜாவும், யுவனும் இணைந்து இசையமைத்துள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். 


விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியாவதால் மாமனிதன் படம் மே 6-ம் தேதி வெளியாகவுள்ளது. ஆர்.கே.சுரேஷ் தன் ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் இப்படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில் இப்படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்ததாகவும், இச்சம்பவம் ஜனவரி மாதமே நடந்துவிட்டதாகவும் இயக்குநர் சீனு ராமசாமி சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க |  இணையத்தில் கசிந்த RRR படம், HD பிரிண்ட்டால் அதிர்ச்சியான படக்குழு


இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஜனவரியில் #மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை. அது விற்பனைக்காக நான் சொல்வதாகச் சொல்வார்கள். நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள். அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டுத் தேதி தானாகவே விற்பனை யாவும் முடிந்தது சார்.நன்றி @rajinikanth'' என்று தெரிவித்துள்ளார்.


 



இதனால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வடிவேலு, பிரபுதேவா, மம்மூட்டி ஆகியோருக்கு இப்படத்தின் கதையைச் சொன்னார் சீனு ராமசாமி. சில காரணங்களால் தள்ளிப்போக, இறுதியில் விஜய் சேதுபதியே மாமனிதன் படத்தில் நடித்தார். சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் விஜய் சேதுபதி அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. பிறகு இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களில் இணைந்த இக்கூட்டணி மாமனிதன் படத்துக்காக நான்காவது முறை இணைந்தது. 


சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இடி முழக்கம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துள்ளன. இப்படமும் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க |  ‘பான் இந்தியா’வுக்குப் பெருமை சேர்த்ததா RRR?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G