எஸ்.எஸ்ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் போன்றவர்களது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. பாகுபலிக்கு பின் ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பை இயக்குனர் ராஜமௌலி ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தை திரையில் காண ஆவலாக இருந்தனர்.
இந்நிலையில் இந்தப் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆன்லைனில் கசிந்துள்ளது. ராஜமௌலியின் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே கசிந்ததால் கோடிக்கணக்கில் இழப்பு நேர்ந்துள்ளது. ஃபிலிம்ராப், தமிழ் ராக்கர்ஸ் உடன் மூவி ருல்ஸ் ஆகிய இணையதளங்களில் 'ஆர்ஆர்ஆர்' படம் கசிந்துள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் என பதிவிட்டுள்ளனர். அத்துடன் மொபைலில் திருட்டு நகலில் பார்க்க வெண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | RRR படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியது இந்த நிறுவனமா?
இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும், மொபைலில் பைரசி காப்பியில் பார்க்க கூடாது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ரியாக்ஷன் கொடுத்து வருகின்றனர். இது பல திருட்டு தளங்களில் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இப்போது அதன் தெளிவான விளைவு படத்தின் வசூலிலும் தெரியும் என்பதில் குறுக்கு வழியில்லை. இந்த ஆன்லைன் கசிவு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள நிறுவனங்களை கதி கலங்க செய்துள்ளது.
இதற்கிடையில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களின் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் போராட்ட கதையை புனைந்து இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆகவும் நடித்துள்ளனர். டிவிவி தனய்யா தயாரிப்பில் இந்த திரைப்படம் 450 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகியுள்ளது.
இந்த பிரம்மாண்ட திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 18 கோடி ருபாய் வசூல் செய்த நிலையில், இதேபோல் அமெரிக்காவிலும் இப்படம் சிறந்த முறையில் கல்லா காட்டியுள்ளது. மேலும் இப்படம் உலகளவில் வெளியான முதல் நாளிலேயே 257.15 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பீஸ்டுடன் மோதும் மற்றொரு படம் - பாக்ஸ் ஆஃபீஸ் பாதிக்குமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR