பேட்ட படத்திற்கு பின் மீண்டும் ஜோடி சேரும் ரஜினி-அனிருத்!
ரஜினியின் பேட்ட திரைப்படத்தை தொடரந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
ரஜினியின் பேட்ட திரைப்படத்தை தொடரந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
கார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அனிருத் அளித்த பேட்டியில், ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் விரைவில் முடித்துவிட்டு, வரும் மார்ச் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு தயாராகி வருகிறதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இப்படத்திற்கான ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் எனவும், பெரும்பாலான காட்சிகளை மும்பையில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது எனவும் தகவல்கள் இதுவரை கசிந்துள்ளது. முழு விவரம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.