ரஜினிகாந்த் நடித்துள்ள “தர்பார்”படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “தர்பார்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.


ரஜினிகாந்த் நடிப்பில் 167-வது படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற 2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.


அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான சும்மா கிழி என்ற பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தர்பார் படத்தின் மொத்த பாடலும் வெளியானது. இந்நிலையில் இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழக அரசை பல நேரங்களில் விமர்சித்து இருந்தாலும், தமது தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நேரு அரங்கத்தை தந்த தமிழக அரசுக்கு நன்றி. வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி எனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என தெரிவித்தார். 


தர்பார் திரைப்படம், பொழுதுபோக்கு மட்டுமல்ல, நல்ல கருத்தையும் சொல்லும் படமாக வந்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.