ரஜினிகாந்த் விரும்பி பார்க்கும் தொடர் இதுதான்..! திரைப்பிரபலம் பகிர்ந்த தகவல்..!
Rajinikanth Favourite Web Series: ஜெயிலர் பட நாயகன் ரஜினிகாந்த் தற்போது ஒரு ஆங்கில வெப்தொடரை விரும்பி பார்த்து வருவதாக அவருடன் நடித்த பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தூங்கிக்கொண்டிருந்த டார்க் காமெடி கதை பாணியை தட்டி எழுப்பிவர் என்ற பெருமைக்கு உரியவர், நெல்சன் திலீப்குமார். இவர், ‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு அவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதையடுத்து அவர் விஜய்யை வைத்து செய்த ‘பீஸ்ட்’ சம்பவமாக அல்லாமல் சரித்திரமாக மாறி, நெகடிவ் விமர்சனங்களை வாரி குவித்தது. பீஸட் பட ரிலீஸிற்கு முன்னதாகவே இவர் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையவுள்ள தகவல் வெளியானதால், சூப்பர் ஸ்டாரை தன் படத்தில் நடிக்க வைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. படம் எப்படி வருமாே என்று பதறிய ரசிகர்களுக்கு, ஆருதல் தரும் வகையில் நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. ஜெயிலர் திரைப்படம் வசூலிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறது. நெல்சனின் டாரக் ஹியூமர் ரஜினிகாந்தின் மாஸ் தனம் ஆகியவை இணைந்து, படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கள் கருத்துகின்றனர்.
ரஜினிகாந்தின் மருமகள்..
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக மலையாள நடிகை மிர்ணா நடித்திருந்தார். இவருக்கு ஜெயிலர்தான் முதல் தமிழ் படம். அதற்குள்ளாகவே இவருக்கு ரசிகர் கூட்டம் ஒன்று உருவாகியிவிட்டது. மிர்ணா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஏற்பட்ட சுவாரஸ்ய அனுபவங்கள் குறித்து பல தகவல்கள் பகிர்ந்து கொண்டார். அப்போது ரஜினிகாந்த் தற்போது பார்த்து வரும் ஒரு தொடர் குறித்தும் கூறினார்.
மேலும் படிக்க | ‘தலைவர் 170’ டைட்டில் இதுதான்..! கசிந்தது ருசிகர அப்டேட்..!
ரஜினிகாந்த் பார்க்கும் தொடர்..
ஹாலிவுட் ஆங்கிலட் தொடர்களுள் ஒன்றாக விலங்குவது, பிரேக்கிங் பேட் (Breaking Bad). இந்த தொடருக்கு இந்தியாவில் பெருமளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஜெயிலர் நடிகை மிர்ணா ஒரு முறை ரஜினிகாந்திடம் அவர் தற்போது ஏதேனும் வெப் தொடரை பார்த்து வருகிறாரா என்று கேட்டாராம். அதற்கு ரஜினி, தான் பிரேக்கிங் பேட் தொடரை பார்த்து வருவதாக கூறியிருக்கிரார். அந்த தொடர் குறித்து வந்த பல நல்ல விமர்சனங்களை பார்த்த பிறகு அதை பார்க்க தொடங்கியதாக அவர் கூறியிருக்கிறார். மேலும் அந்த தொடர், வேற லெவலில் இருப்பதாகவும் மிர்ணாவிடம் கூறியிருக்கிறார் ரஜினி.
“இவர் பார்த்த வேலையாகத்தான் இருக்கும்..”
பிரேக்கிங் பேட் தொடர், த்ரில்லர்-டார்க் ஹீயூமர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். தமிழ் நாட்டில் உள்ள சினிமா ரசிகர்களின் ஃபேவரட் வெப் தொடர்களுள் இந்த தொடரும் முக்கிய இடத்தினை பிடித்திருக்கும். ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கும் இந்த தொடரை மிகவும் பிடிக்கும். இதை அவரே சில நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். தற்போது ரஜினிகாந்த் இந்த தொடரை பார்த்து வருவதாக கேள்வி பட்டதில் இருந்து, ரசிகர்கள் பலர் “எல்லாம் நெல்சன் பார்த்த வேலையாகத்தான் இருக்கும்..” என மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ரஜினிகாந்த்..
ஜெயிலர் பட ரிலீஸிற்கு முன்னர் ரஜினிகாந்த், மாஸான கம்-பேக் கொடுத்தே பல வருடங்கள் ஆகிவிட்டதாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். 2.0, பேட்ட, காலா, தர்பார் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவு வசூலை குவித்தாலும் அதில் ரஜினியின் மாஸ் தனத்தை உணர முடியவில்லை என்ற கருத்து ஒன்று நிலவி வந்தது. அந்த ‘மாஸ்’ தாகத்தை தற்போது ஜெயிலர் படம் நிவர்த்தி செய்துள்ளதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஜெயிலர் திரைப்படம், ஒரே வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று ஒரு பதிவினை வெளியிட்டிருந்தது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் இந்த சாதனையை ஜெயிலர் படம் மட்டுமே புரிந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து ரஜினியை பலர் பாக்ஸ் ஆபிஸ் கிங் என புகழ்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஓடிடியில் வரிசையாக ரிலீசாகும் படங்கள்..! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ