டார்கெட் 600 கோடி..! ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் இவ்வளவா..?
Jailer Box Office Collection: ஜெயிலர் படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. படம், பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிதுள்ள படம், ஜெயிலர். சுமார் 16 நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமன்றி உலகளவில் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படம்..
கடந்த 5 ஆண்டுகளில் ரஜினிகாந்தின் படங்கள் படைக்காத சாதனையை ‘ஜெயிலர்’ திரைப்படம் படைத்து வருகிறது. ரஜினியின் கடைசி படமான ‘அண்ணாத்த’ குடும்ப ரசிகர்களுக்கு பிடித்ததே தவிர, விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. 2.0, தர்பார் போன்ற படங்களுக்கும் இதே கதைதான். ‘பேட்ட’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அதில் உண்மையான ரஜினியின் மாஸ் தனத்தை உணர முடியவில்லை என ரசிகர்கள் கருதினர். இந்த குறையை எல்லாம் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தில் தீர்த்திருப்பதாக பலரும் விமர்சனம் கொடுத்துள்ளனர்.
ஜெயிலர் படம், ரிலீஸான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கலாம் தகவல்கள் வெளியானது. இந்த வசூல் நிலவரம் 2வது நாளான நேற்று 75 கோடியாக இருந்ததாக கூறப்பட்டது. படத்தின் வசூல், நாட்கள் ஆக ஆக ஏறிக்கொண்டே போனது. சமீபத்தில் ஜெயிலர் படம் 350 கோடியை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தது. அதில், படம் 375.40 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே ஜெயிலர் படம்தான் ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலை குவித்துள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | ‘போடி வெண்ணை..’ தன்னை ட்ரோல் செய்த பெண்ணை பப்ளிக்காக திட்டிய அசோக் செல்வன்..!
600 கோடியை நெருங்குகிறதா..?
ஜெயிலர் படம், 545 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த வசூல் 600 கோடியை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பொன்னியின் செல்வன் செய்த மொத்த வசூலையும் இன்னும் ஜெயிலர் படம் முந்தவில்லை. ஜெயிலர் படத்தில் பல திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதில், ரஜினிகாந்த்தை தவிர அனைவருமே காமியோ கதாப்பாத்திரங்களாகத்தான் வந்து செல்கின்றனர். நடிகை தமன்னா, ஜெயிலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு பாடலிற்கு நடனமாடிவிட்டு சில காட்சிகளில் மட்டுமே தலைக்காட்டி சென்று விட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு இணையாக கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் காட்சிகள் பேசப்பட்டுள்ளது. மோகன்லாலின் நடிப்பிற்கும் படத்தின் வில்லன் விநாயகத்தின் வில்லத்தனத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது முழு நடிப்பையும் ஜெயிலர் படத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ஜவான் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! படம் எப்படியிருக்கு? பார்த்தவர்கள் சொன்ன ரிவ்யூ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ